இதுவரை யாரும் சொல்லாத விதத்தில், புத்தம் புதிய பாணியில் தனது 13 வது பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மெகா பிரின்ஸ் வருண் தேஜ் .இப்படம் செப்டெம்பர் 19ஆம் தேதியன்று துவங்குகிறது.

தனக்கென ஒரு தனி பாணியில் பயணித்து, மிகக் குறுகிய காலத்தில் தன்னை செதுக்கிக்கொண்டவர், மெகா பிரின்ஸ் வருண் தேஜ். ஒரு குறிப்பிட்ட வகையான கதைகளில் சிக்கிக்கொள்ளாமல் மாஸ் மற்றும் கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து வணிக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட வித்தியாசமான திரைப்படங்களை சாமர்த்தியமாக செய்து வருகிறார். இதனால் ஹை கிளாஸ் தொடங்கி மாஸ் ஆடியன்ஸ் வரை இவருக்கு எல்லா மட்டத்திலும் ரசிகர் பட்டாளம் உண்டு..

இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை மிக சுவாரசியமான முறையில் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் வெகு ஆர்வத்துடன் ஒரு ஸ்கிரிப்டைப் படிப்பது காண்பிக்கப்படுகிறது. அந்தக் கதையை மிகவும் லயித்துப் படிக்கிறார் என்பது அவரது முகத்தில் வெளிப்படுகிறது. மேலும் படிக்கப் படிக்க அந்த ஸ்கிரிப்டின் மீது அவருக்கு அதிக ஆர்வம் உண்டாவதை உணர முடிகிறது. அவர் இறுதியாக ஒரு பொம்மை விமானத்தை ஸ்கிரிப்டில் வைத்திருக்கிறார், மேலும் ஒரு விமானம் புறப்படும் சத்தத்தை நாம் கேட்க முடிகிறது. முடிவில் அந்தக் கதை போர் பின்னணியையும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும் தயாராகியுள்ளது என்பதை உணர முடிகிறது.

இப்படி ஒரு வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ள வருண் தேஜின் புதுப்பட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆரவார வரவேற்பைப் பெற்றுள்ளது. வருண் தேஜ் நிறைய ஹோம் வொர்க் செய்து இப்படத்தில் தனது புதியதொரு முத்திரையைப் பதிக்க தயாராகியுள்ளார். அவரது இந்த 13 வது படத்தின் படப்பிடிப்பு செப்டெம்பர் 19ம் தேதியன்று ‘ஸ்டார்ட் ஆக்‌ஷனுக்கு தயாராகிறது.

இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களுக்கு இப்போதே ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.