பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சீதா, சின்னி ஜெயந்த், முனிஸ் காந்த், அறந்தாங்கி நிஷா, அழகம்பெருமாள், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டிரிகர்’.
30 வருடத்துக்கு முன் அனாதை ஆசிரமத்தில் இருக்கும் எல்லா குழந்தைகளும் பலரால் தத்தெடுக் கப்படுகின்றனர். அந்த குழந்தைகளை 3 வருடம் கழித்து ஒரு கூட்டம் கடத்தி வெளிநாட்டுக்கு விற்கிறது. இதை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி அருண்பாண் டியன் பின்னர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார்.
அருண்பாண்டியன் மகன் அதர்வா நேர்மையான காவல் அதிகாரியான ஒரு கடத்தல் கும்பலைப் பிடிக்க செல்லும் போது நடக்கும் பிரச்சனையால் வேலை பறி போகிறது. இருந்தாலும் அண்டர் கவர் போலீசாக இருந்து காவல்துறையினர் செய்யும் தவறுகளை கண்காணிக்கும் வேலை அதர்வாவுக்கு கொடுக்கப்படுகிறது.அப்படி கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது குழந்தைகளை சிலர் கடத்துவது தெரியவருகிறது.
அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளை நூதனமுறையில் ஒரு கும்பல் கடத்துகின்றனர். இந்த பிரச்சனையின் பின்னணியில் அதர்வாவின் தந்தை அருண்பாண்டியன் கடந்த காலமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆதாரத்துடன் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதர்வா, இறுதியில் கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘டிரிகர் . படத்தின் மீதிக்கதை.
காவல்துறை வேடத்துக்குப் பொருத்தமாக அதர்வா அமைந்திருக்கிறார். தனது அப்பா மீது விழுந்த களங்களத்தை துடைக்க வேண்டும், அதே சமயம் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் அதர்வா காட்டும் தீவிரமும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் அருமை.
அதர்வா ஜோடியாக தன்யா நடித்துள்ளார். காதல் காட்சிகளோ, டூயட் பாடல்களோ இல்லாமல் ஒரு சில இடங்களில் மட்டுமே காதல் உள்ளது. தான்யாவிற்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் நிறைவாக வந்து போகிறார்.
அதர்வா அப்பாவாக நடித்திருக்கும் அருண் பாண்டியன், ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டவர் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். சின்னி ஜெயந்த் , முனீஸ்காந்த், நிஷா , அன்புதாசன் ஆகியோரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் . வில்லனான நடித்திருக்கும் ராகுல் தேவ் ஷெட்டி மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்டுக்கும் ரகம்,, பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக பயணித்துள்ளது.ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் ஆக்ஷன் காட்சிகளை அற்புதமாக படப்பிடித்து காட்டியிருக்கிறார்.
அனாதை ஆசிரம குழந்தை கடத்தல் என்ற அடிப்படையில் பல படங்களில் பார்த்தாலும் வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல் வித்தியாசமான முறையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி அதிரடி ஆக்ஷன் என்று கதை வேகம் எடுக்கிறது.
நடிகர்கள் : அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சீதா, சின்னி ஜெயந்த், முனிஸ் காந்த், அறந்தாங்கி நிஷா, அழகம்பெருமாள்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: சாம் ஆண்டன்
மக்கள் தொடர்பு அதிகாரி : சுரேஷ் சந்திரா, ரேகா (டி ஒன்)
Leave a Reply