வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு  தயாரிப்பில்  செல்வராகவன் இயக்கத்தில்  யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் ( இருவேடம்), இந்துஜா, எல்லி அவ்ராம், பிரபு, யோகிபாபு, ஆகியோர் நடிப்பில்  வெளியாகி இருக்கும் ‘நானே வருவேன்’

தனுஷ்  (கதிர் ,பிரபு ) இரட்டை பிறவிகள் அண்ணன் கதிர் வித்தியாசமான குணம் கொண்டவர், தம்பி பிரபு சாந்தமானவன்.  சிறுயவயதில் அப்பாவையே கொல்லும் கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் வெளியூர் போய்விடுகிறார் அவர்களுடைய அம்மா

பல வருடங்கள் கழித்து பிரபு தனது மனைவி மகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பிரபுவின்  மகள் தனியாக பேசுகிறார். அவர் மீது ஒரு பேய் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த பேய் ஒரு கோரிக்கை வைக்கிறது. அதை செய்தால் மட்டுமே உன் மகளை விட்டுப் போவேன் என சொல்கிறது. இறுதியில் பிரபு பேயிடம் இருந்து  மகளை  காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ‘நானே வருவேன்’ படத்தின் மீதிக்கதை.

கதிர், பிரபு என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிப்பை மிரட்டி எடுத்துள்ளார்.பிரபு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தனுஷ், பொறுப்புள்ள தந்தையாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீது பாசம் காட்டுவது, வருந்துவது, காப்பாற்ற நினைப்பது என்று நடித்து கண்கலங்க வைத்திருக்கிறார். கதிர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தனுஷ் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். . பிரபு மற்றும் கதிர் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வேறுபாடு காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார்.

மனைவியாக நடித்து இருக்கும் இந்துஜா, கணவன், மகள் பாசத்திற்காக ஏங்குபவராக நடித்திருக்கிறார். தனுஷின் மகளாக வரும் ஹியாதவேவின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் படத்துக்குப் பலம்.யோகி பாபுவின் ஒன் லைன் காமெடி இந்த படத்தில் நன்றாக இருந்தது. மனநல மருத்துவராக நடித்திருக்கும் பிரபு அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

 யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை.படத்தை தூக்கி நிறுத்துகிறது. ‘வீர சூர தீரா’ பாடல் படத்தின் டெம்போவை அதிகப்படுத்துகிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, படத்திற்கு மிகப்பெரிய பலம்.  

வித்தியாசமான கதையை வைத்து அப்பா மகள் பாசம், அண்ணன் தம்பி, அப்பா மகன் பாசம் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன் முதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்றாலும் இரண்டாம் பாதி சற்று மெதுவாகவே நகர்கிறது.  முதல் பாதி முடியும் போது வரும் டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காத விதமாக அமைந்திருந்தது.

நடிகர்கள்: தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ரம், பிரபு, யோகி பாபு மற்றும் பலர்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா

இயக்கம்: செல்வராகவன்.

மக்கள் தொடர்பு அதிகாரி : ரியாஸ் அஹமத், டைமண்ட் பாபு

Leave a Reply

Your email address will not be published.