சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும் , இப்படைப்பு  மிக முக்கிய இடத்தை பெறும் என்பது.  அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற ” விசாரணை ” . நான் ” விசாரணை ” திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திர கனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும் , மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும். இதை போன்ற படைப்புகளை தமிழ்  மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள் என்ற விஷயம்  எனக்கு மகிழ்ச்சியையும் , மேலும் இதை போன்ற படைப்பை வழங்க உற்ச்சாகத்தையும் தருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.