சுபாஷ்கரன், மஹாவீர், ஆஷிஷ் சிங், மற்றும் பிரைம் வீடியோ தயாரிப்பில் அக்ஷய்குமார், நாசர், நுஷ்ரத் பருச்சா, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், சத்யதேவ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ராம் சேது’
தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கும் அக்ஷய் குமார் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். நாசர் நடத்தும் நிறுவனம் தொழில் வணிகத்துக்காக பல மடங்கு செலவு ஆவதால் ராமர் பாலத்தை கண்டுபிடிக்க சொல்கிறார்கள் மற்றும் அந்த பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதா என்பதையும் நிரூபிக்க சொல்கிறார்கள் , இதனையடுத்து அக்ஷய் குமார் ராமர் பாலத்தை கண்டுபிடிக்க அவரின் குழுவுடன் சென்று ராமர் பாலத்தை கண்டுபிடித்து அது மனிதர்களால் கட்டப்பட்டதா என்பதையும் நிரூபித்தாரா ? இல்லையா ? என்பதே ’ராம் சேது’ படத்தின் மீதிக்கதை .
தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் அக்ஷய் குமார், கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். இந்தியாவில் செய்யும் ஆராய்ச்சியில் ராமர் பற்றி நிரூபிக்க முடியாத நிலையில் இலங்கைக்கு சென்று ராவணன் வாழ்ந்த வரலாறை நிரூபிகக போராடும் அக்ஷய் குமார் அசல் வரலாற்று ஆராய்ச்சியாளராகவே மாறிவிடுகிறார்.
அக்ஷய் குமாருடன் பணியாற்றும் சக விஞ்ஞானிகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ், அக்ஷய் குமாரின் மனைவியாக நடித்திருக்கும் நூஷ்ரத் பருக்ஷா,ஆகியோரும் தங்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
நாயகன் அக்ஷய் குமாருக்கு உதவி செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யதேவ் நடிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதோடு, படத்தை சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்ல துணை நிற்கிறது. தொழில் அதிபராக நடித்திருக்கும் நாசர் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் டேனியல் பி.ஜார்ஜின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம் , பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அசீம் மிஸ்ராவின் ஒலிபத்திவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்த்துள்ளது. இயக்குனர் அபிஷேக் சர்மா எந்த ஒரு சர்ச்சையும் ஏற்பட்டதாக வகையில் திரைக்கதையை உருவாக்கி அதை அனைவரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்.
நடிகர்கள் அக்ஷய்குமார், நாசர், நுஷ்ரத் பருச்சா, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், சத்யதேவ்
இயக்கம்: அபிஷேக் சர்மா
ரிலீஸ்: ஜீ ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு அதிகாரி : சுரேஷ் சந்திரா, ரேகா ( D one)
Leave a Reply