ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ஜி தில்லி பாபு தயாரிப்பில் சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார், மீரா கிருஷ்ணன்,ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிரள்’
பரத் – வாணி போஜன் இருவரும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் இவர்களது திருமணத்தை வாணி போஜனின் தந்தை கே.எஸ். ரவிக்குமார் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பின்னர் இந்த பிரச்சினைகள் தீர குல தெய்வத்திற்கு கிடா வெட்டினால் சரியாகும் என்று முடிவெடுத்து சொந்த ஊருக்கு பரிகாரம் செய்ய செல்கின்றனர். .
கிராமத்தில் குலதெய்வ வழிபாடு முடிந்து அவசர வேலை காரணமாக இரவோடு இரவாக சென்னைக்கு செல்ல முடிவெடுக்கிறார். பரத் குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர். முகமூடி அணிந்த மர்ம நபர் இவர்களை கொலை செய்ய முயற்சிக்கிறார். இறுதியில் மர்ம மனிதன் யார்? பரத் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை ‘மிரள்’ படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் பரத், திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.. மனைவி மற்றும் மகன் மீது பாசம், ,கோபம் என அனைத்திலும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் வாணி போஜன் அமைதியாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெறுகிறார்.. குறிப்பாக கிளைமாக்சில் அழும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.
வாணி போஜன் தந்தையாக வரும் கே.எஸ்.ரவிகுமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பரத்தின் நண்பனாக நடித்திருக்கும் ராஜ் குமார் மர்ம முடிச்சுகள் அவிழ்ப்பதற்கு முக்கியமானவராக இருக்கிறார்.
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் சேர்க்கிறது. பிரசாத்தின் பின்னணி இசையும் திரைக்கதை நகர்விற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
அறிமுக இயக்குனர் சக்திவேல் முதல் படம் அல்லாமல் படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார். எடுத்துக்கொண்ட கதை வித்தியாசமாகவே உள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் திகில் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை ஒரு மெசேஜ் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர்.
நடிகர்கள் : பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார், மீரா கிருஷ்ணன்,ராஜ்குமார்
இசை : பிரசாத்
இயக்கம் : சக்திவேல்.
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & ரேகா
Leave a Reply