லைகா புரொடக்ஷன்ஸ் – சுபாஸ்கரன் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா, ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் புலி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கு ‘பட்டத்து அரசன்’
மிகப்பெரிய கபடி வீரராக இருக்கும் ராஜ்கிரண் மகன், மகள், பேரன், பேத்தி என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியும், அவருடைய மகனும் இறந்து விடுகிறார். அவருடைய மருமகள் ராதிகா. ராதிகாவின் மகன் அதர்வா. பழைய குடும்ப சண்டையினால் ராதிகா, அதர்வா தனியாக வசித்து வருகிறார்கள் அதர்வா இரண்டு குடும்பத்தினையும் ஒன்று சேர்க்க போராடி வருகிறார்.அவரது போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்து வருகிறது
இதற்கிடையே, ஊரே கொண்டாடிய ராஜ்கிரண் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்துவதோடு, அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் ஊருக்காக கபடி விளையாட கூடாது என்று தடையும் விதிக்கிறார்கள். கபடி விளையாடத் தெரியாத அதர்வா தாத்தா குடும்பம் மீது விழுந்த பழியை போக்க ஊருக்கு எதிராக ஒரு சவால் விடுகிறார். அந்த சவால் என்ன? சவாலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே பட்டத்து அரசன்’ படத்தின் மீதிக்கதை.
துடிப்பான கிராமத்து இளைஞனாக அசத்தியுள்ளார் அதர்வா. சண்டைக்காட்சிகளில் பத்து பேரை ஒற்றை ஆளாக அடித்தாலும் நம்பும்படியாக அதிரடி காட்டியிருக்கிறார். ராஜ்கிரண் தன்னுடைய அனுபவ நடிப்பை அழகாக காண்பித்திருக்கிறார். அதிலும் கபடி விளையாட்டின் போது அவருடைய ஒவ்வொரு காட்சியும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஆஷிகா ரங்கநாத் குடும்ப பாங்கான முகம். கபடி வீராங்கனையாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலிக்கிறார்.அம்மாவாக ராதிகா வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு கதையை சொல்வதே மிகப்பெரிய சவால் என்றாலும், அந்த சவாலை சாமர்த்தியமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சற்குணம், காதல், ஆக்ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்தையும் அளவாக கொடுத்திருக்கிறார்.
லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணிக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் கேட்கும் ரகம்
கபடி விளையாட்டை மையமாக வைத்து கதை எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம், அதை முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.
நடிகர்கள் : அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா, ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் புலி
இசை : ஜிப்ரான்
இயக்கம் : ஏ.சற்குணம்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
Leave a Reply