லேபிரின்த் பிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம், ரியா சுமன், புகழ், ரெடின் கிங்க்ஸ்லி, முனிஸ்காந்த், ஈ.ராமதாஸ், இந்துமதி, சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’

2019ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ ஆத்ரேயா’ படத்தின் ரீ மேக்தான் இந்த ‘‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’

குரு சோமசுந்தரத்திற்கும் இந்துமதிக்கும் பிறந்த மகன் சந்தானம். இந்துமதியை முறைப்படி திருமணம் செய்யாத காரணத்தால் சிறு வயதிலிருந்தே பல அவமானங்களை சந்தித்து பெரியவனாகிறார்
கோவையில் டிடெக்டிவ் வேலை பார்த்து வருகிறார் நகரில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக இருக்கும் சந்தானம், தன் பத்திரிகையாளர் நண்பனின் உதவியால் சில குற்றங்களை கண்டுபிடிக்கிறார். இதனிடையில் தன்னுடைய தாயின் மரண செய்தி அறிந்து ஊருக்கு செல்கிறார்

 நண்பர் மூலம் மர்மமான ரயில் தண்டவாள கேஸ் ஒன்று சந்தானத்திற்கு கிடைக்கிறது. தொடர்ச்சியாக ரயில் தண்டவாளம் ஓரம் கிடக்கும் அனாதை பிணங்கள்,அதை பற்றி ஆராய்கிறார். அதே நேரம் அந்த கிராமத்தில் திடீர் திடீர் என்று பல மரணங்கள் நடக்கிறது. இதனை கண்டு பிடிக்கும் சந்தானம் எதிரியின் வலையில் சிக்குகிறார். இறுதியில்  சந்தானம் தொடர்  மரணங்களுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் மீதிலதை.

ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற கதாப்பாத்திர நடித்திருக்கும் சந்தானம் இப்படத்தை முழுவதுமாக தாங்கி பிடித்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரத்துக்கு சந்தானம்தான் சரியான தேர்வு  சில காட்சிகளில் அவருக்கே உரித்தான உடல்மொழி நகைச்சுவைகள் கைகொடுத்திருக்கின்றன.

நாயகி ரியா சுமன் தொலைக்காட்சி நிருபர் வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். ஆரம்பத்தில் சந்தானத்தை பேட்டி எடுக்கும் அவர் பிறகு  சந்தானத்தின் உதவியாளராக துப்பறியும் பணியிலும் ஈடுபடுகிறார்.இவரின் நடிப்பும் சிறப்பு.

முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், ஈ.ராமதாஸ், குரு சோமசுந்தரம், ஆதிரா, இந்துமதி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக  செய்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கலாம் தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவுவில் கிராமத்து அழைகை மிக அழகாக காட்டியுள்ளார்.

படத்திற்கு சரியான நாயகன் தேர்வு இருந்தாலும் படத்தின் திரைக்கதையும் காட்சி ஓட்டமும் விறுவிறுப்பும் இல்லாததால் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. அதையும் சரியாக செய்திருந்தால் மனோஜ் பீதாவுக்கு பாராட்டு கிடைத்திருக்கும்.

நடிகர்கள் : சந்தானம், ரியா சுமன், புகழ், ரெடின் கிங்க்ஸ்லி, முனிஸ் காந்த், ஈ.ராமதாஸ், இந்துமதி, சோமசுந்தரம்

இசை : யுவன்சங்கர்ராஜா

இயக்கம்  : மனோஜ் பீதா

மக்கள்  தொடர்பு : சுரேஷ் சந்திரா, நாசர், ரேகா (D’one)

Leave a Reply

Your email address will not be published.