புஷ்கர் & காயத்ரி வால்வாட்சர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நாசர், சஞ்சனா, லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் பெராடி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’  இத்தொடர் மொத்தம் 8 பாகங்களை கொண்டது. டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

கன்னியாகுமரி பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அது அங்கு  படப்பிடிப்புக்காக வந்த கதாநாயகி  என்று ஊடகங்களில் சொல்லப்படுகிறது.  ஆனால், இறந்ததாக சொல்லப்படும் கதாநாயகி  உயிருடன் தான் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.  இறந்தது அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் வெலோனி என்பது தெரியவருகிறது.  

போலீசாரின் விசாரணையை ஒப்புக்கொள்ளாத நீதிமன்றம் சிறப்பு அதிகாரியாக எஸ்ஜே சூர்யாவை நியமிக்கிறது.  இதனையடுத்து  எஸ்ஜே சூர்யா உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’  வெப் சீரிஸின் மீதிக்கதை.

எஸ்ஜே சூர்யா வழக்கம் போல நடிப்பில் அசத்தி இருக்கிறார்.  போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார்.  கொலையை அவர் துப்பறியும் காட்சிகள் பிரமாதம் , அதே சமயம் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடுவது, அதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மனைவியிடம் புலம்புவது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார். சினிமாவில் நாம் இதுவரை பார்க்காத எதார்த்தமான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா,

வெலோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகி சஞ்சனா  அழகு, நடிப்பு, கண்களில் ஒரு குழந்தைத் தனம் என முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை தந்துள்ளார  வெலோனியின் அம்மா வேடத்தில் நடித்திருக்கும் லைலா, ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு மிக எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்.

போலீஸ் எஸ்.ஐ வேடத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, கன்னியாக்குமரி மாவட்ட தமிழை உச்சரிக்கும் விதம் மற்றும் இயல்பான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். எஸ்ஜே சூர்யாவின்  மனைவி வேடத்தில் நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் நடிப்பு பாராட்டும் விதத்தில் இருந்தது

சைமன் கே. கிங்கின் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.சரவணன் ராமசாமி காட்சிகளை மிகைப்படுத்தாமல் எதார்த்த ஒளியில் படமாக்கியிருக்கி றார்கள்.

ஆண்ட்ரூ லூயிஸ் வெறும் கொலை, கொலையாளி என பொழுதுபோக்காகவே மட்டுமில்லாமல் படம் பல சமூக விஷயங்களையும் தொட்டு செல்கிறது. குழந்தை வளர்ப்பு, பெண்கள் மீதான பார்வை, ஒரு செய்தியை இந்த சமூகம் அணுகும் விதம், பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னை என பல தேவையான விஷயங்களையும் பேசி இருப்பது பாராட்டுக்குரியது

நடிகர்கள் : எஸ்.ஜே.சூர்யா, நாசர், சஞ்சனா, லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் பெராடி,

இசை : சைகன் கே.கிங்

இயக்கம் : ஆண்ட்ரூ லூயிஸ்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.