திருப்பதி பிரதர்ஸ் என்.லிங்குசாமி வழங்க , லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் விஜயா முத்துசுவாமி தயாரிப்பில் ஜெகன் விஜயா இயக்கத்தில் வினோத் கிஷன், கெளரி கிஷன், சச்சின், ரோகிணி, சுருளி, மகேந்திரன், பாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பிகினிங்’
புது முயற்சியுடன் வெளிவந்த பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்கிரீன் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளிவந்திருக்கும் படம் தான் பிகினிங்.
சென்னையில் மனவளர்ச்சி குன்றிய வினோத் கிஷன்,தன் அம்மா ரோகிணியுடன் வாழ்ந்து வருகிறார். மகனுக்காகவே வாழும் ரோகிணி வேலைக்கு செல்வதற்கு முன்பு அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்கிறார். இந்த கதை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க
மற்றொரு புறத்தில் நாயகி கௌரி கிஷனை, சச்சின் மற்றும் அவரின் நண்பர்களால் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறாள்.. அங்கிருந்து வெளியேற துடிக்கும் அவருக்கு ஒரு பழைய பட்டன் போன் கிடைக்கிறது. அதில் ஏதோ ஒரு நம்பரை அழுத்தி அந்த நபரிடம் உதவி கேட்கிறார்.
அந்த போன் காலை அட்டென்ட் செய்யும் வினோத்துக்கு கௌரி என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாததால் கௌரி வினோத்துக்கு தன்னுடைய நிலைமையை புரிய வைக்க முயற்சி செய்கிறார். இறுதியில் வினோத், கெளரியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே பிகினிங்’ படத்தின் மீதிக்கதை.
ஆர்டிசத்தால் பாதிக்கப்பட்ட வேடத்தில் நடித்திருக்கும் வினோத் கிஷன் இந்த படத்தில் தன்னுடைய வித்தியாசமான உடல் மொழியால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.அந்தக்கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார் வினோத் கிஷன்
நாயகியாக நடித்திருக்கும் கௌரி, வினோத்துக்கு இணையாக போட்டிபோட்டு நடித்து இருக்கிறார். கோபம், அழுகை, தடுமாற்றம், பொறுமை என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து முதல் பாதி முழுவதும் அதிக ஸ்கோர் செய்கிறார்.
வில்லனாக வரும் சச்சினும் பல இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். லகுபரன், மகேந்திரன், சுருளி, பாலா, ரோகிணி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
சுந்தரமூர்த்தி கே.எஸ்-யின் பின்னணி இசை கதையோடு பயணித்துள்ளது. அதையெல்லாம் சரி செய்யும் வகையில் இருக்கும் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
உருவத்தை பார்த்து பழகுவதை விட உள்ளத்தை பார்த்து பழக வேண்டும், என்ற கருத்தை மையமாக கொண்டு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன் விஜயா இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை சரியாக கொண்டு வந்துள்ள இயக்குனரை பாராட்டி ஆக வேண்டும். அதனாலேயே இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது
நடிகர்கள் : வினோத் கிஷன், கெளரி கிஷன், சச்சின், ரோகிணி, சுருளி, மகேந்திரன், பாலா
இசை : சுந்தரமூர்த்தி கே.எஸ்
இயக்கம் : ஜெகன் விஜயா
மக்கள் தொடர்பு : ஜான்சன்
Leave a Reply