தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அங்கத்தினரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் நலத்துறையின் அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி தலைமையில் , பிலிம்சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர்கள் அருள்பதி, கிருஷ்ணாரெட்டி, துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், சேம்பர் பில்டிங் கமிட்டி சேர்மனுமான கல்யாணம் ஆகியோர் நேரில் சந்தித்து அமைச்சராக பதவி ஏற்றதற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சேம்பர் வளாகத்தில் 2வது பிளாக் கட்டுவதற்கு அனுமதி வாங்கி தந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
அடுத்து கட்ட இருக்கும் 3வது பிளாக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 10,000 சதுர அடி வழங்குவதையும் உறுதிபடுத்தி அமைச்சரிடம் தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிலிம்சேம்பர் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published.