இன்பாக்ஸ் பிக்சர்ஸ் – அஞ்சும் குரேஷி, சாஜும் குரேஷி தயாரிப்பில் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் ரித்திகா சிங், சந்திப் கோயட், மணிஷ் ஜன்ஜோலியா, ஜியான் பிரகாஷ் வெளியாகி இருக்கும் ’இன் கார்’
ரித்திகா சிங் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கும் படம் ‘இன் கார்’. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ’இன் கார்’
கல்லூரி முடித்து பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ரித்திகா சிங்கை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று காரில் கடத்திச் செல்கிறது. அந்த மூவரிடமும் சிக்கிக் கொண்டு இன்னல்களுக்கு ஆளாகும் ரித்திகா சிங். காம வெறி பிடித்த அந்த கும்பலிடம் இருந்து ரித்திகா சிங் தப்பித்தாரா இல்லையா என்பதே ’இன் கார்’ படத்தின் மீதிக்கதை.
இறுதிச்சுற்று’ படத்திற்கு பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங், மிக பலமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் அவர்களிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சியில் அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது .படம் முழுவதையும் என் நடிப்பின் மூலம் கதையை நகர்த்தி செல்கிறார் ரித்திகா சிங்
ரித்திகா சிங்கை கடத்தி செல்லும் சந்தீப் கோயட், மணிஷ் ஜன்ஜோலியா, ஜியான் பிரகாஷ் ஆகிய மூவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். முன்னாள் காவலாளியாக நடித்திருக்கும் அந்த பெரியவர் இயல்பான நடிப்பின் மூலம் அனைவரின் அன்பை பெறுகிறார்.
இசையமைப்பாளர் மதியாஸ் டூப்ளிஸியின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் மிதுன் கங்கோபத்யாய் மிக சவாலான பணியை மிக சாமர்த்தியமாக செய்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் காருக்குள் நடப்பது போல் இருந்தாலும், அதை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்.
இந்தியாவில் நடக்கும் பெண் கடத்தல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கும் ஹர்ஷ் வர்தன்,திரைக்கதையை இன்னும் விறு விறுப்பாக கொடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.
நடிகர்கள் : ரித்திகா சிங், சந்திப் கோயட், மணிஷ் ஜன்ஜோலியா, ஜியான் பிரகாஷ்\
இசை : மத்தியாஸ் டூப்ளிஸி
இயக்கம் : ஹர்ஷ் வர்தன்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (AIM)
Leave a Reply