அபி &அபி என்டர்டைன்மெட் பிரைவேட் லிமிடெட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில்  எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில்  கலையரசன், வாணி போஜன், வேல ராம மூர்த்தி, சரத் லோகித்சவா, ஷாலி நிவேகாஸ். ஆகியோர் நடிப்பில்  ‘செங்களம்’    ஒன்பது எபிசோடுகள் கொண்ட இணைய தொடர்   ஜீ 5 தளத்தில் வெளியாகி இருக்கிறது.

3 பேரை கொலை செய்தற்காக கலையரசன், டேனியல், லகுபரன்,.ஆகியோரை போலீஸ் தேடி வருகிறது.. விருதுநகர்  நகராட்சி தலைவர் பதவியை 40 ஆண்டு காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும்  சரத் லோகித்சவா குடும்பம் இவரது மூத்த மகன் பவன்  விருதுநகர் நகராட்சியின் நடப்பு தலைவராக இருக்கிறார். .. .வாணி போஜனை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் வெளி ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் பவன்  உயிரிழக்கிறார். மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அனுதாபம் ஏற்படுகிறது இதனையடுத்து வாணி போஜன் அரசியலில் இறங்க ஆசைப்படுகிறார்.

லோகித்சவாவுக்கு  வந்த உறவு என்பதை விட ரத்த உறவான தனது மகளோ மகனோ அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்பதுதான்  ஆசை.  தான் புறக்கணிக்கப்படுவது அறிந்த மருமகள், வாணி போஜன்  துணையாக நம்பிக்கையான  அரசியல் தெரிந்த ஒருவர் இருக்க வேண்டும் என நிலைக்கு இவருக்கு பள்ளிகாலத் தோழியான ஷாலி நிவேகாஸ் நினைவுக்கு வர அவரை தேடிச் சென்று அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார்.

ஷாலிக்கு துணையாக அவளது சகோதரர்கள் ( கலையரசன், டேனியல், லகுபரன்,..வருகிறாள்.   சாலியின் அரசியல் தந்திரத்தால் விருதுநகர் நகராட்சி தலைவராக பொறுப்பேற்கிறார். ஒரு சூழ்நிலையில் புகழின் உச்சிக்கு செல்லும் வாணிபோஜன்  எதிரிகளால் கொல்லப்படுகிறார். இறுதியில் வாணி போஜனை கொலை செய்தவர் யார்? எதற்காக கொலை செய்தார்கள்  என்பதே படத்தின் மீதிக்கதை.

சூரியகலா ராஜமாணிக்கம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜனின் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாச்சியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஷாலியின் நடிப்பு அற்புதம்  சிவஞானம் எனும் கதாபாத்திரம் முதுமையின் காரணமாக சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்துகிறார் சரத் லோகித்சவா,

கதையின் முதல் நான்கு எபிசோடுகள் திருமணம், மரணம், கொலை என பயணிப்பதால் வேகமாகச்செல்கிறது. இதையடுத்து வரும் எபிசோடுகிளில் அரசியல் ஆதாயங்கள், பதவி ஆசை, அதற்காக செய்யப்படும் குற்றச்செயல்கள் என காண்பிக்கப்படுகின்றன.

இசையமைப்பாளர் தரண்குமார் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு மிகப் பெரிய பலமாக  இருக்கிறது. வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு  மலை, காடுகள், மேடுகள் என அனைத்து இடத்தையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

அயலி’ என்ற இணைய தொடரின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து   சிறப்பான தரமான  படைப்பாக கொண்டு வந்திருக்கும் ஜி 5 குழுமத்தினருக்கு வாழ்த்துக்கள்

நடிகர்கள் : கலையரசன், வாணி போஜன், வேல ராம மூர்த்தி, சரத் லோகித்சவா, ஷாலி நிவேகாஸ்

இசை : தரண் குமார்…

இயக்கம் – எஸ்ஆர் பிரபாகரன் …

மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (AIM)

Leave a Reply

Your email address will not be published.