உதய் புரொடக்ஷன்ஸ் & மேஜிக் டச் பிக்சர்ஸ் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், மற்றும் எம் பி வீரமணி தயாரிப்பில் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், நேஹா ஜா, அனிதா சம்பத், பாண்டியராஜன், பால சரவணன், தீபா, ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தெய்வ மச்சான்’
எலக்ட்ரிக் கடை நடத்தி வருபவர் நாயகன் விமல் இவருடைய கனவில் வரும் வேட்டைக்காரன் ( வேல. ராமமூர்த்தி) சொல்வது எல்லாம் நடக்கிறது. விமல் தனது தங்கை அனிதாவிற்கு மாப்பிளை பார்த்து வருகிறார், ஆனால் அவர் நினைத்தபடி மாப்பிள்ளை கிடைக்காமல் திருமண வரன் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
பக்கத்து ஊர் ஜமீன்தார் ( ஆடுகளம் நரேன்) ,வயதான தன் தம்பிக்கு தங்கையை பெண் கேட்டு வர விமல் அதனை மறுக்கிறார் , நரேன் அதனை மனதில் வைத்துக்கொண்டு அனிதாவிற்கு மாப்பிளை கிடைக்காதவாறு செய்கிறார். இதற்கிடையே விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கும், வத்சன் வீரமணிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் விமலின் கனவில் வரும் வேல ராமமூர்த்தி, ”உன் தங்கை கணவன் மச்சான் திருமணமாகி இரண்டு நாட்களுக்குள் இறந்து விடுவான்”, என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் விமல் தங்கை அனிதா திருமணத்தை நிறுத்தினாரா? இல்லையா? என்பதே ’தெய்வ மச்சான்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் விமலுக்கே உரித்தான கிராமத்து இளைஞர் .கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தி இருக்கிறார். விமல், தனது மச்சானை பாதுகாப்பதற்காக செய்யும் வேலைகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. விலங்கு திரைப்படத்திற்கு பிறகு நல்ல ஒரு ஜாலியான ஒரு திரைப்படமாக விமலுக்கு வந்து இருக்கிறது தெய்வ மச்சான்.
விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை நேகா. சில காட்சிகளில் வந்தாலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பால சரவணனின் காமெடிகள் நன்றாக வந்திருக்கிறது தங்கையாக அனிதா சம்பந்த கதாபாத்திரத்திற்கு நன்றாகவே நியாயம் செய்து இருக்கிறார்.
இசையமைத்திருக்கும் அஜீஸ் பாடல் கேட்கும் ரகம், பின்னணி இசை ,கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கேமில் ஜெ. அலெக்ஸ் திண்டுக்கல் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் ஒரு சாதாரணமான கதையை காமெடி கலந்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அதிரடி சரவெடியாக சிரிப்பை வரவழைத்திருக்கிறார்கள். . எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று பார்த்து சிரித்து வர வேண்டிய படம் ’தெய்வ மச்சான்’
நடிகர்கள் : விமல், நேஹா ஜா, அனிதா சம்பத், பாண்டியராஜன், பால சரவணன், தீபா, ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி
இசை: அஜீஸ்
ஒளிப்பதிவு: கேமல் ஜே அலெக்ஸ்
இயக்கம்: மார்டின் நிர்மல்குமார்
தயாரிப்பு: உதயகுமார், கீதா உதயகுமார், எம் பி.வீரமணி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply