சீனிவாச சித்தூரி, பவன் குமார் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா,
கிரித்தி ஷெட்டி, சரத்குமார், சம்பத், அரவிந்தராஜ், ஜீவா ( கெஸ்ட் ரோல்), பிரியாமணி, ராம்கி, பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு,இரு மொழிகளில் வெளியாகி இருக்கும் ’கஸ்டடி’
ஆந்திரா, ராஜமுந்திரியில் நடக்கும் வெடி விபத்து ஒன்றில் பள்ளி குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்படுகின்றனர். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது. நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் நாக சைதன்யா .அதே ஊரை சேர்ந்த கிரித்தி ஷெட்டியை காதலித்து வருகிறார், ஆனால் கிரித்தியின் குடும்பத்தினர் இதை விரும்பாமல் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர்.
நாக சைதன்யா, இரவு ரோந்து செல்லும் போது, குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் கைது செய்து காவல் நிலைய சிறையில் அடைக்கிறார். பிறகு சிபிஐ அதிகாரியான சம்பத், ரவுடி அரவிந்த்சாமியை கைது செய்து அழைத்து செல்லும் உண்மையை நாக சைதன்யா தெரிந்துக் கொள்கிறார் இதன் பின்னர் சிறையில் இருக்கும் அரவிந்த்சாமியை கொலை செய்ய முதலமைச்சர் பிரியாமணி, போலீஸ் உயரதிகாரி சரத்குமாரை அனுப்புகிறார். இறுதியில் நாக சைதன்யா அரவிந்த்சாமியை உயிருடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே ’கஸ்டடி’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் நாக சைத்தன்யா, தனது நடிப்பின் மூலம் நேர்மையை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தையும் சரியாக செய்து பாராட்டுக்களை பெறுகிறார். நாயகி கீர்த்தி ஷெட்டி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாக சைத்தன்யாவின் அண்ணனாக நடிகர் ஜீவா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார்.
ராஜூ என்கிற பாத்திரத்தில் வரும் அரவிந்தசாமி எதற்கும் கலங்காத துணிவுள்ள தாதாவாக அனாயாசமான நடிப்பைக் காட்டி ரசிகர்களிடம் கைத்தட்டல்களை பெறுகிறார். முதலமைச்சர் தாட்சாயினியாக வரும் பிரியாமணி சிறிது நேரம் வந்தாலும் அந்தப் பாத்திரத்தில் ஈர்க்கிறார். போலீஸ் உயர் அதிகாரியாக சரத்குமார் உயர் போலீஸ் எடுப்பான தோற்றத்தில் மிடுக்காக வருகிறார்.
இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப் பலம் அமைந்திருக்கிறது. சேசிங் காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளை அமர்க்களமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் கதிர், ஆக்ஷன் காட்சிகளுக்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்.
வெங்கட் பிரபு ஆக்சன் மசாலாவாக தெலுங்கு ரசிகர்களுக்காக படத்தை உருவாக்கி இருக்கிறார் . சாதாரண கருவை கூட ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து இயக்கி மேஜிக் நிகழ்த்தும் வெங்கட் பிரபு, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கஸ்டடி படம் வெங்கட்டின் சாயலில் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
நடிகர்கள் : நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி, சரத்குமார், சம்பத், அரவிந்தராஜ், ஜீவா
இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா (D one)
Leave a Reply