டி பிக்சர்ஸ் தயாரிப்பில்தயாள் பத்மநாபன்  இயக்கத்தில்  வரலட்சுமி சரத்குமார், ஆரவ்,சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா ,யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ்,சுப்பிரமணிய சிவா ஆகியோர் நடிப்பில்  ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’  ஆஹா ஓடிடி தளம் வெளியாகியுள்ளது.

மகத் இரவில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையை ரவுடி கும்பல் கடத்துவதை பார்க்கிறார். இதை யாருக்கும் தெரியாமல் அவர் செல்போனில் வீடியோ எடுத்து அருகில் உள்ள மாருதி வீடியோ போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கிறார். ஆனால் அந்த ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி கும்பலுக்கும் தொடர்பு  இருப்பதால் மகத்தை அன்று இரவே கொலை செய்யப்படுகிறார்.

நண்பன் மஹத்தை காணவில்லை என்று தேடும் பெண் போலீஸ் வரலட்சுமி அவரது நண்பர்கள் சந்தோஷ், யாசர், விவேக்கிற்கு மஹத் கொல்லப்பட்ட தகவல் தெரியவர அதற்கு காரணமான (சுப்ரமணியம் சிவா மற்றும் இன்ஸ்பெக்டரை கொல்ல முடிவு செய்கின்றனர்.   திட்டத்தை செயலபடுத்தும் நாளில் வேறொரு மர்ம நபர் ஆய்வாளரையும், தாதா சிவாவையும் சுட்டு கொன்று விடுகிறார்கள்.

இதை விசாரணை செய்ய உதவி ஆய்வாளர் ஆரவ்  வருகிறார்.  இறுதியில் ஆரவ் ஆய்வாளர் -தாதாவை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? கொலைக்கான  காரணம் என்ன? என்பதே படத்தின் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’  மீதிக்கதை.

அர்ச்சனா எனும் பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் வரலக்ஷ்மி. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உதவி ஆய்வாளராக ஆரவ் இடை வேலைக்கு பிறகு வருகிறார்   தனக்கு கொடுத்த வேலையை  குறைவில்லாமல் செய்திருக்கிறார்.  ஆரவ்வின் தோற்றம் உடல் மொழி அனைத்தும் அருமை. தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு இடம் கிடைக்கும்

நண்பர்களாக மஹத் ,சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லன்களாக பார்கவ்,சுப்பிரமணிய சிவா ஆகியோர்  இயல்பான  நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

மணிகாந்த் கத்ரி  இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் , பின்னை இசை கதையோடு பயணிக்கிறது. சேகர் சந்திரா ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒரு பக்காவான க்ரைம் திரில்லர் பாணியிலான ஒரு கதையை உருவாக்கி திரைக்கதையால் சுவாரசியம் குறைவாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். பெரும்பாலான காட்சிகள் காவல் நிலையத்தையே சுற்றி வந்தாலும், கொஞ்சமும் அலுப்பு தட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதற்கு இயக்குனரின்  பங்கு முக்கியமானது. னைவரின்  கவனத்தை ஈர்க்கும் சுவாரஸ்யமான படமாக உருவாகி உள்ளது, மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன்.

மொத்தத்தில் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’  அன்புக்காக  நடக்கும் கொலை  

நடிப்பு: வரலட்சுமி, ஆரவ், மஹத் ராகவேந்திரா , சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்ரமணியம் சிவா,

தயாரிப்பு: டி பிக்சர்ஸ் தயாள் பத்மநாபன்

இசை:மணிகாந்த் கத்ரி

இயக்கம்: தயாள் பத்மநாபன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா ( D ‘ one)

Leave a Reply

Your email address will not be published.