தேவகன்யா புரொடக்சன்ஸ் சார்பில் பிஜு கரிம்பின்கலயில் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் உல்லாஷ் சங்கர் இயக்கத்தில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ்  சிவப்பிரகாசம், செல்வா  ஆகியோர்நடிப்பில் வெளியாகி இருக்கும் ’1982 அன்பரசின் காதல்’  –

கேரள எல்லையோரம் வசிக்கும் தமிழக இளைஞன் ஆஷிக் மெர்லினும் மலையாள பெண் சந்தனாவும்  ஒன்றாக  கல்லூரியில் படித்து வருகிறார்கள்.  சந்தனா மீது அஷிக் மெர்லினுக்கு காதல் மலர்கிறது.. ஆனாலும் மூன்று வருடமாக காதலை வெளிப்படுத்தாமலே இருக்கிறார். ஒருநாள் சந்தனா –  ஆஷிக்கை கேரளாவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல சொல்கிறார்  மறுநாள் பைக்கில் அழைத்து செல்ல வழியில் பைக் பழுதாகிறது.

3  பேர் கொண்ட குப்பாளிடம் ஆஷிக் – சந்தனா மாட்டிக் கொள்கிறார்கள் அந்த வழியாகச்செல்லும் உல்லாஷ் சங்கர் இருவரையும் காப்பாற்றி தனது இருப்பிடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு அவர்களை உல்லாஷ் சங்கர் முறைத்து பார்க்க பயந்து அங்கிருந்து  தப்பி ஓடுகிறார்கள். அவர்களை விடாது உல்லாஷ் துரத்துகிறார். இறுதியில் உல்லாஷ்  ஆஷிக் – சந்தனா துரத்துவதற்கான காரணம் என்ன? என்பதே  ’1982 அன்பரசின் காதல்’   படத்தின் மீதிக்கதை.

நாயகன் அன்பரசுவாக நாயகன்  ஆஷிக் மெர்லின்  முதல் படம் போல இல்லாமல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். தன காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும் காதலியை காப்பாற்ற தன உயிரையும் பயணம் வைப்பது என சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியாக சந்தனா அரவிந்த்  கேரளத்து புதுவரவு பார்ப்பதற்கு அமுல் பேபி போல் இருக்கிறார். இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் அமல் ரவீந்திரன் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக வரம் அருணிமா கன்னக்குழி அழகில் அனைவரையும் கவர்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

கொல்லன் பட்டறை வைத்திருப்பவராக நடித்திருக்கிறார்  இயக்குனர். உல்லாஸ் ஷங்கர்  மகள்  மீது அதிக பாசம் வைத்திருப்பவராக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.  இவர் கண்களாலே அனைவரையும் மிரட்டுகிறார்.

எஸ் . சிந்தாமணியின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.கேரளாவில் உள்ள அழகிய இடங்களின்  அற்புதமாக படம்பித்து காட்டியிருக்கிறியார்  ஒளிப்பதிவாளர் ஜிஸ்பின் செபாஸ்டியன்

இரு காதல் கதையை சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளார்   இயக்குனர். உல்லாஸ் ஷங்கர்  அதுமட்டு இல்லாமல் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு  குறித்தும்  ஒரு சமூக அக்கறையுடன் படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ’1982 அன்பரசின் காதல்’  உண்மையான காதலர்களுக்கான ஒரு தரமான படம்.

நடிகர்கள் : ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ் ,உல்லாஸ் ஷங்கர்

இசை : எஸ்.சிந்தாமணி

இயக்கம் : உல்லாஸ் ஷங்கர்

மக்கள் தொடர்பு : விஜயமுரளி, கிளாமர் சத்யா

Leave a Reply

Your email address will not be published.