வேணு குண்ணப் பள்ளி,  சி.கே.பத்மா குமார், அண்டோ ஜோசப் தயாரிப்பில்  ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆஸிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், கலையரசன், அஜு வர்கீஸ், பீட்டர், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, ஷிவதா, அனாமிகா, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’2018 ’(மலையாளம் )

கடந்த மே 5 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் படம் தான் 2018. கேரளாவில் 2018 ஆம் ஆண்டு வந்த வெள்ள பாதிப்பினை மையப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் இதுவரை சுமார் 150 கோடிக்கும் மேல் வசூலை  குவித்துள்ளது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் டோவினோ தாமஸ் வேலை பயத்தால் பாதியிலேயே  வேலையை விட்டு கேரளாவிற்கு ஓடி  வந்து விடுகிறார்.  இங்கு கிடைக்கும் சிறு வேலையை  செய்து வருகிறார். அங்கு இருக்கும் பள்ளிக்கு  ஆசிரியராக வரும்  பெண்ணின் மீது காதல் மலர இரு வீட்டார்  சம்மதத்தோடு திருமணம் நடைபெற ஏற்பாடு  நடந்து கொண்டிருக்கிறது.

 கேரளா முழுவதும் கடுமையான மழைப்பொழிவால் ஆங்காங்கே சிறிது வெள்ளம் வர ஆரம்பிக்கிறது.  அரசாங்க வேளையில் இருக்கும் குஞ்சாகோ போபன் பல வருட உழைப்பால் கட்டிய புது வீடு, மனைவி மற்றும் குழந்தை,பார்க்க முடியாத சூழ்நிலை அதே போல்  மீனவ குடும்பத்தை சேர்ந்த  இளைஞன்  பணக்கார வீட்டு பெண்ணும் காதலிக்கிறார்கள். அதற்கு அப்பெண்ணின்  தந்தை மீனவ குடும்பத்தை அவமதிக்கிறார்

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சரக்கு லாரி ஓட்டிச் செல்லும் கலையரசனின் தனது குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்.  வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கேரளாவை சுற்றிக் காட்டச் செல்லும் வாகன ஓட்டி அஜு வர்கீஸ்  மலை வெள்ளத்தால் சந்திக்கும்  பிரச்சனை  இப்படி இன்னும் பல சம்பவங்கள் நடக்கும் நிலையில் மெல்ல மெல்ல  ஊரில் மழை கொட்டத் தொடங்கி மாநிலம் முழுவதுமே வெள்ளத்தில் முழ்குகிறது. இறுதியில் மழை   வெள்ளத்தால் இவர்களின் அனைவரின் வாழ்க்கை என்ன? என்பதே 2018 (மலையாளம்  படத்த்தின் மீதிக்கதை.

நோபின் பாலின் பின்னணி இசை கதையோடு நம்மை பயணிக்க செய்கிறது. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம்  வெள்ளக் காட்சிகாலை அழகாக  படமாக்கியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதை பிரதிபலிக்கும் படமாக தான் இயக்குனர் இந்த படத்தை எடுத்திருந்தார் ஒரு பிரச்சனை வரும்போது மக்கள் எவ்வாறு ஒன்று கூடுகிறார்கள் என்றும், மனிதம் எப்படி செயல்படுகிறது என்பதை இந்த படம் காட்டியுள்ளது.  ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.  

நடிகர்கள் : குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆஸிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், கலையரசன், அஜு வர்கீஸ், பீட்டர், லால், நரேன், அபர்ணா பாலமுரளி,

இசை : நோபின் பால், வில்லியம் தாமஸ்

இயக்கம் :  ஜூட் ஆண்டனி ஜோசப்

மக்கள் தொடர்பு : ஜான்சன் 

Leave a Reply

Your email address will not be published.