ரமேஷ் வர்மா கதை, தயாரிப்பில், நிசார் சபியின் இயக்கத்தில் புதுமுகம் ஹவிஷ், ரெஜினா, நந்திதா, ஆதித்தி ஆர்யா, அனிஷா ஆகியோர் நடிப்பில் ரொமாண்டிக் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகியிருக்கும் ’7’ (செவன்)

ஐடி துறையில் வேலை செய்யும் ஹீரோ (ஹவிஸ்) நந்திதாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். சில நாட்களில் அவர் காணாமல் போக, காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரி ரகுமானிடம் புகாரளிக்கிறார் நந்திதா.

அதே நபரை கணவர் எனக் கூறி ‘மிஸ்ஸிங்’ கம்ப்ளைண்ட் கொடுக்கிறார்கள் இன்னும் 3 பெண்கள். இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடிக்காரன் என்ற ரீதியில் விசாரணையை முடுக்கி விடுகிறது காவல் துறை. முடிவில் ஹவிஸை கைதும் செய்கிறது.

இதில் நான்காவதாக புகார் கொடுத்த பெண் தான் என்னுடைய மனைவி என்கிறார் ஹவிஷ். இதனால் குழப்பமடைந்த காவல்துறை இன்னும் விசாரணையை தீவிரப்படுத்துகிறது.

இதற்கிடையே ஹவிஷின் பெயர் கார்த்திக் அல்ல கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லும் பைத்தியத்தை யாரோ கொடூரமாக கொலை செய்கிறார்கள். அந்த பழியும் ஹவிஷ் மீது விழுகிறது. உண்மையில் ஹவிஷ் யார்? அவர் 3 பெண்களை ஏமாற்றியது உண்மையா? அவர் கார்த்திக்கா? கிருஷ்ணமூர்த்தியா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.

ஹீரோவாக நடித்திருக்கும் புதுமுகம் ஹவிஸ், கார்த்திக் மற்றும் சுந்தரமூர்த்தி என்று இரண்டு விதமான கதாபாத்திரங்களில் தனது வேலையை சரியாக செய்து கவர்கிறார்.

நாயகன் ஹவிஷ்தான் என் கணவர் எனச் சொந்தம் கொண்டாடும் நந்திதா ஸ்வேதா, த்ரிதா செளத்ரி, அதிதி ஆரி ஆகிய மூவரும் காதல் காட்சிகளில் தாராளமாக நடித்து ரசிகர்களைக் கவருகிறார்கள். ரகுமான் போலிஸ் கேரக்டரில் அசத்தியிருக்கிறார். அவரது தோரணைகள் காட்சிகளில் ஈர்க்கிறது. ரெஜினா கஸாண்ட்ரா இந்தப் படத்தின் மிக முக்கிய பாத்திரம். ஃபிளாஷ் பேக்கில் வரும் அவர்தான் படத்தின் முழு பலமும் எதிரபாராத ஆச்சரியத்தில் வில்லத்தனத்தில் பின்னுகிறார்.

கதை திரைக்கதை எழுதி ரமேஷ் வர்மா இப்படத்தை தயாரித்துள்ளார். திரைக்கதையின் திருப்பங்கள் படத்திற்கு பெரும் பலம். ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் நிஷார் ஷபி. சைதன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். திரில்லர் படத்தின் பலம் இசை தான். இசை படத்துடன் இணைந்து பயணித்துள்ளது.

நடிகர்கள் : ரகுமான், ஹவிஷ், ரெஜினா கஸ்ஸாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா, ட்ரிதா சௌத்ரி
இசை : சைத்தான் பரத்வாஜ்
இயக்கம் : நஜீர் ஷபி
தயாரிப்பு : க்ரீன் புரடக்ஷன்
மக்கள் தொடர்பு: நிகில்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.