பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யன்ஷா யோகி பாபு, அபிமன்யு சிங், விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டக்கர்’
கிராமத்து இளைஞன் சித்தார்த் வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரன் ஆகிவிடவேண்டும் என்று சென்னைக்கு வருகிறார். சினிமா, பார், ஜிம் என சின்ன சின்ன வேலைகள் செய்யும் அவருக்கு எல்லா இடங்களிலும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுவதால் அவரால் எந்த வேலையிலும் நீடிக்க முடிவதில்லை.
ஒருவழியாக சீன கேங்ஸ்டர் ஒருவரின் சொகுசு கார் டாக்ஸி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து பென்ஸ் கார் ஓட்டுகிறார். எதிர்பாரா விதமாக காரை விபத்துக்குள்ளாக்கி விட ஏழு வருடம் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க சொல்கிறார் முதலாளி.
இதனால் வாழ்க்கை வெறுத்து சாக துணியும் சித்தார்த் வீம்பாக ரவுடிகளிடம் தகராறு செய்கிறார். திடீரென்று சித்தார்த்துக்கு தைரியம் பிறந்து ரவுடிகளை அடித்து போட்டுவிட்டு அங்கிருந்த சொகுசு கார் ஒன்றை எடுத்துச் செல்ல அந்த காரின் டிக்கியில் நாயகி திவ்யான்ஷா கௌஷிக் இருக்கிறார். இறுதியில் நாயகன் சித்தார் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே ‘டக்கர்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் சித்தார்த் ஆசை கோபம் அழுகை ஆவேசம் எனப் பல வகைகளில் தனது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்திஇருக்கிறார். காதல் காட்சிகளில் மன்னனாக ஜொலித்திருக்கிறார் சித்தார்த். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளார் .
நாயகி திவ்யான்ஷா படம் முழுக்க கவர்ச்சி கலந்த அழகுப் பதுமையாக வந்து செல்கிறார். ஏற்றுள்ள தனது பாத்திரத்தின் மூலம் முரட்டுத்தனமாகவும் அது சார்ந்த உடல் மொழியாலும் புதிதாகத் தெரிகிறார். யோகி பாபு ,விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த் என்ற மூன்று பேரும் சிரிக்க வைக்க முயன்று சில இடங்களில் வெற்றி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
நிவாஸ் கே பிரசன்னாவின் நிரா பாடல் ரசிக்க முடிகிறது . பின்னணி இசை கதையோடு ஓட்டத்திற்கு ஏற்ப உள்ளது. ‘நிரா நிரா’ பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
பணம் மற்றும் வாழ்க்கை பற்றி மாறுபட்ட கருத்துகள் கொண்ட இரண்டு பேரை இயக்குநர் காட்டிய விதம் ரொம்ப சுவராஸ்யமாக இருக்கிறது. . ஒரு சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்துக்கொண்டு அதற்கான திரைக்கதையில் மெனக்கெடாமல் பலவீனமான காட்சிகளால் படம் ரசிகர்களை கவர தவறிவிடும்
மொத்தத்தில் ‘டக்கர்’ பெயரில் மட்டும் உள்ளது.
மதிப்பீடு: 2.5 / 5
நடிகர்கள் : சித்தார்த், திவ்யன் ஷா, யோகிபாபு, அபிமன்யூ சிங், விகீஷ் காந்த், முனிஸ்காந்த், ராமதாஸ்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
இயக்கம்: கார்த்திக் ஜி கிரிஷ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா (D’ One)
Leave a Reply