ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரிப்பில் சுபாஷ் லலிதா சுப்ரமணியம் இயக்கத்தில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’
கணவர் குரு சோமசுந்தரத்தை பிரிந்து வாழும் ஊர்வசி தன் மகன் பாலுவுடன் வாழ்ந்து வருகிறார். கேக் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் நாயகன் பாலு வர்க்கீஸுக்கு இரவில் கண் பார்வை தெரியாது அதனால், அவரது திருமணம் நின்றுவிடுவதோடு, வேலையும் பறிபோகிறது. இதனால், சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபகிறார். நாயகன்
தீவிர விநாயகர் பக்தையாக இருக்கும் ஊர்வசி.தனது குடும்ப தெய்வமான பிள்ளையார் சிலை ஒன்றை, பல வருடங்களாக தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார் அவரது அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள ஒரு கூட்டம் முன் வருகிறது
அதே சமயம், புதிய கோவில் ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைக்க வேண்டும் என்று ஊர்வசியின் உறவினர்கள் முடிவு செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ஊர்வசியின் வீட்டில் இருந்த சிலை காணாமல் போகிறது. இறுதியில் காணாமல் போன விநாயகர் சிலை கிடைத்ததா? இல்லையா? எனபதே ’சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ படத்தின் மீதிக்கதை.
தீவிர விநாயகர் பக்தை கதாபாத்திரத்தின் நடித்திருக்கிறார் ஊர்வசி இவரது அனுபவ நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். இவரது கணவராக குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். இவருக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் பாலு வர்க்கீஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து அனைவரையும் ரசிக்க வைக்கிறார். சார்ல்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சுப்பிரமணியன் கே.வி-இன் இசை படத்திற்கு பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதில் காட்சிகள் அலாக்காக உள்ளது. கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்திரங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சமுருக அக்கறையோடு விநாயகர் சிலையை மையமாக வைத்து இயல்பான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம். அனைத்து விஷயங்களையும் மேலோட்டமாக சொல்லியிருப்பதும், கேரள பகுதிகளை சென்னையாக காட்டியிருப்பதும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ’சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ பொறுமை
மதிப்பீடு : 2.30 /5
நடிகர்கள் ஊர்வசி, கலையரசன், பாலு வர்கிஸ், குருசோமசுந்தரம்
இசை: சுப்ரமணியம் கே. வி.
இயக்கம்: சுபாஷ் லலிதா சுப்ரமணிய
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply