யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா, ரிதுமந்த்ரா, நிவாஸ். அதித்தன், பவா செல்ல துரை, அனத்நாக், விவேக் பிரசன்னா, கஜராஜ், தீனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ரெஜினா’
நாயகி னைனாவின் அப்பா ஒரு சமுக ஆர்வலர் அவரை சுனைனாவின் கண் முன்னேயே சிலர் வெட்டி கொலை செய்துவிடுகின்றனர்., அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் சுனைனாவிற்கு பல வருடங்கள் கழித்து நாயகன் அனத்நாக்வுடன் காதல் மலர்கிறது , பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர், சுனைனாவின் கணவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார்
ஒருநாள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வங்கியில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து செல்லும்போது சுனைனாவின் கணவரை கொலை செய்து விட்டு செல்கின்றனர் மீண்டும் மீள முடியாத துக்கத்திற்கு ஆளாகும் சுனைனா கணவரை கொன்றவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார் , இறுதியில் கணவரை கொன்றவர்களை சுனைனா பழி வாங்கினாரா ? இல்லையா? என்பதே ரெஜினா’ படத்தின் மீதிக்கதை.
கதை நாயகியாக நடித்திருக்கும் சுனைனா முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிப்பதால் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். பழிவாங்கும் படலத்தில் அதிகம் பேசாமலேயே இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அமைதியான நடிப்பில் ஆர்ப்பரிக்கிறார்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நடிப்பின் மூலம் பூர்த்தி செய்திருக்கிறார்.
ரித்து மந்த்ரா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, நிவாஸ் அதித்தன், பாவா செல்லதுரை, தீனா, கஜராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சதிஷ் நாயரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்,, பின்னணி இசையும் கதை நகர்விற்கு துணை நிற்கிறது. ஒளிப்பதிவாளர் பவி கே.பவன், கேரளா, பொள்ளாச்சி என அனைத்து இடத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.படம் முழுவதையும் ஆக்ஷன் உணர்வோடு நம்மை பயணிக்க வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை மலையாளத்தில் ’பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். வழக்கமான ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் கதையை நாயகியை மையமாக வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘ரெஜினா’ கணவருக்காக பழிவாங்கும் மனைவி
மதிப்பீடு 3 / 5
நடிகர்கள் : னைனா, ரிதுமந்த்ரா, நிவாஸ். அதித்தன், பவா செல்ல துரை, அனத்நாக்,
இசை : சதீஷ்.நாயர்
இயக்கம் : டொமின் டி. சில்வா
மக்கள் ஹதொடர்பு : ஜான்சன்
Leave a Reply