நாயகி ப்ரீத்திக்கு சிறுவயதிலேயே அவரது பாதி முகம் ஏதோ காரணத்தினால் பாதிக்கப்பட அதற்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டு வருகிறார் கிராமத்தில் இருந்து தனது மாமன் மகளுடன் மதுரைக்கு  வருகிறார் நாயகன் ராம்குமார். எப்படியாவது பெரிய நடிகராகி விட வேண்டுமென விளம்பரம், சீரியல் போன்றவற்றில் நடிக்க தொடங்குகிறார்..

மதுரையில்  நாயகி  ப்ரீத்தி நோட்டு ,புத்தகம் டெலிவரி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் வேலைக்கு  சேரும் இளைஞன்  நோட்டு புத்தகம் டெலிவரி செய்யும்போது சிலர் தரும் போதை மருந்தையும்  டெலிவரி செய்கிறார். தனது நிறுவனத்தில் தன்னை அறியாமல் ஏதோ நடக்கிறது என சந்தேகப்படும் ப்ரீத்தி, தனது மாமனை அழைத்து அதை கண்காணிக்க சொல்கிறார்.

மாமன் ராம்குமாருக்கு உண்மை தெரிய வந்து அதை ப்ரீத்தியிடம் சொல்ல வருகிறார். ஆனால் அதற்கு முன்பே வில்லன்கள் முந்திக்கொண்டு  ப்ரீத்தியை  கொலை செய்து  விடுகின்றனர். இந்த பாலி ராம்குமார் மீது விழுகிறது.  இறுதியில்  நாயகன் ராம்குமார் ப்ரீத்தியை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே சித்தரிக்கப்பட்டவை  படத்தின் மீதிக்கதை.

இந்தப்படத்தின் நாயகன் ராம்குமார் தான், படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார். இந்த மூன்று சுமைகளையும் தன் மீது ஏற்றிக்கொண்டாலும் நடிப்பில் தன்னை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சி அவரது இன்னொரு நடிப்பு முகத்தை வெளிப்படுத்துகிறது.

முறைப் பெண் பிரீத்தி எதார்த்தமாக நடித்திருக்கிறார்.  ர். கிட்டத்தட்ட முழு படத்திலும் பாதி முகத்தை மூடியபடியே நடிப்பதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும் தந்து நடிப்பால் சிறப்பாக செய்ட் இருக்கிறார்.வில்லனாக கரிக்கோல் ராஜு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள குமரேஷ்பாபுவும் நரித்தனம் கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.   ராம்குமாருக்கு ஆதரவான வக்கீலாக வரும் கணேஷ்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் : தியாகுவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் குருமூர்த்தி, சுதன்வின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதையோட்டம் பயணிக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் போதைப் பொருள்கள் எந்த விதமாக எல்லாம் அதை உபயோகிப்பவர்களுக்காக கடத்தப்படுகின்றன என்கிற உண்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும் அதேபோல ஒரு பெண் தனியாக நின்று சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாகவும் இந்த கதையை உருவாக்கி இயக்கி இருக்கும் ராம்குமார் நடிப்பு, இயக்கம் , தயாரிப்பு  என அனைத்திலும் தனது  திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகர்கள் : ராம்குமார், பிரீத்தி, கணேஷ்குமார், குமரேஷ் பாபு, துர்கா, ரவி, மணி, மதன், ராஜஶ்ரீ

இசை : தியாகு

இயக்கம்: ராம்குமார்

மக்கள் தொடர்பு : விஜயமுரளி & கிளாமர் சத்யா 

Leave a Reply

Your email address will not be published.