சக்தி சினி புரொடக்ஷன்ஸ் சார்பாக டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், மெட்ராஸ் புகழ் ஹரி, ஸ்வாதி முத்து , ஶ்ரீலேகா ராஜேந்திரன், சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’காடப்புறா கலைக்குழு’  

காடப்புறா கலைக்குழு’ என்ற பெயரில்  கரகாட்ட குழு ஒன்றை நடத்தி வருகிறார் முனீஸ்காந்த். இக்குழுவில், மேளம் வாசிப்பவராக இருக்கிறார்  காளி வெங்கட். வெள்ளந்தி குணம் கொண்ட முனீஸ்காந்த் தன் கலை மீதும் மற்றவர்கள் மீதும் அளவு கடந்த அன்பு செலுத்தி வருகிறார்.

இவரது குழுவில் டெலிபோன் ராஜ், ஸ்வேதா ரமேஷ், அந்தகுடி இளையராஜா ஆகியோர் உள்ளனர். முனிஷ்காந்தின் தம்பி ஹரி கிருஷ்ணன் தன்னுடன் கலைக் கல்லூரியில் படிக்கும் இசைக் கச்சேரி குழு வைத்திருக்கும் (சூப்பர் குட் சுப்ரமணி) தங்கை ஸ்வாதி முத்துவை காதலிக்கிறார்.

ஊர் தலைவர் தேர்தலில் மைம் கோபியை எதிர்த்து நிற்பவருக்கு ஆதரவாக முனீஷ்காந்த் மற்றும் அவரது கலைக்குழுவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் தேர்தலில் தோல்வியடையும் மைம் கோபி, தனது தோல்விக்கு காரணமான முனீஷ்காந்த்தை  கொலை செய்ய  ஆட்களை .அனுப்புகிறார்.   இறுதியில் முனீஷ்காந்த்  உயிர் பிழைத்தாரா? இல்லையா? என்பதே  ’காடப்புறா கலைக்குழு’   படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் முனீஸ்காந்த், அற்புதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.   ஒரு கிராமிய நடனக் கலைஞர் வேடத்தில் நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பவர், நகைச்சுவை காட்சிகளிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார். நடனத்தில் பட்டய கிளப்பியிருக்கிறார்  

நடிகர் காளிவெங்கட்  வழக்கமான தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். ஹரி, ஸ்வாதி முத்து இருவரின் காதல் மற்றும் நடனம்  படம்  நன்றாகவே வருவதற்கு துணை நிற்கின்றனர்  ஸ்ரீலேகா ராஜேந்திரன் , சூப்பர்குட் சுப்பிரமணி, ஆதங்குடி இளையராஜா மற்றும் வில்லனாக வரும் மைம்கோபி ஆகியோருக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்ய முடித்திருக்கிறார்கள்.

ஹென்ரியின் இசையில் காதல் பாடல்கள் இனிமையாக இருக்கிறது , கிராமிய பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய  பலமாக   உள்ளது. வினோத் காந்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.

கிராமியக் கலைஞர்கள்  வாழ்க்கை கதையில் அவர்களின் பெருமைகளை மட்டும் பேசாமல் கிராமிய கலைஞர்களின் அவல நிலையையும் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜாகுருசாமி,  எந்த இடத்திலும் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லாமல், ஒரு அழகான அருமையான குடும்பத்தோடு ரசிக்கும்படியான படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ’காடப்புறா கலைக்குழு’   கிராமிய  கலையின்  சிறப்பை சொல்லும் படம்

மதிப்பீடு 3 / 5

நடிகர்கள் : முனிஸ்காந்த், காளிவெங்கட், சூப்பர் குட் சுப்ரமணியம், மைம் கோபி, ஹரிகிருஷ்ணா,

இசை: ஹென்றி

இயக்கம்: ராஜா குருசாமி

 மக்கள் : தொடர்பு :  சதீஸ், சிவா  (AIM)

Leave a Reply

Your email address will not be published.