சாந்தி டாக்கீஸ் – அருண் விக்னேஷ் தயாரிப்பில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், இயக்குநர் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு, மோனிஷா பிளஸி, அருவி மதன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மாவீரன்’
நாயகன் சிவகார்த்திகேயன் தன் அம்மா சரிதா மற்றும் தங்கை மோனிஷாவுடன் குப்பத்தில் வசித்து வருகிறார் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட சிவகார்த்திகேயன் ஓவிய கலைஞராக இருக்கிறார். ஒருநாள் இவர்கள் வசித்து வரும் குப்பத்தை காலி செய்து தரும்படி அரசாங்கத்திடம் இருந்து நோட்டீஸ் வருகிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயனின் குடும்பம் மற்றும் அபபகுதி மக்கள், அரசு கட்டிக்கொடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார்கள்
புதிதாக வந்த கட்டிடத்தில் பல குறைகள் இருக்கிறது. கைதொட்ட இடங்களெல்லாம் பெயர்த்துக் கொண்டு வர, இதையும் சகித்துக் கொண்டு வாழவேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார். ஆனால், சரிதாவோ கோபம் கொள்கிறார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் சிவகார்த்திகேயன் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போடுகிறது. இறுதியில் புதிய கட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிவகார்த்திகேயன் காப்பாற்றினாரா? இல்லையா? எனபதே ’மாவீரன்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் சிவகார்த்திகேயன் மற்ற படங்களில் இருந்து சற்று மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார் கோழையாக இருக்கும் ஒருவர் மாவீரனாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதார்த்தமான நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார். ஆக்ஷன்,காமெடி,செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை கொடுத்து கைத்தட்டல் பெறுகிறார். படத்தின் முழுக்கதையையும் தன் தோளில் சுமந்து நிற்கிறார்
கதாநாயகியான நடித்திருக்கும் அதிதி சங்கர் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் மிரட்டலான நடிப்பை கொடுத்து அனைவரையும் மிரள வைக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் நடிப்பு கவனிக்க வைக்கிறது.
சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா கவனிக்க வைக்கிறார் யோகிபாபு செய்யும் காமெடிகள் படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. விஜய் சேதுபதியின் குரல் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
பரத் சங்கரின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் மிகப்பெரிய ஹிட் பின்னணி இசை காட்சிகள் நகர்விற்கு துணை நிற்கிறது. விது அய்யனா ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது .
குடிசைமாற்று வாரியங்கள் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் குடிசைப்பகுதி மக்களின் அவல நிலையை தெளிவாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மடோன் அஷ்வின் எந்த இடத்திலும் கதையை தொய்வடைய விடாமல் கதையை அழகாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’மாவீரன்’ வெற்றியை நோக்கி
மதிப்பீட்டு : 3.30 / 5
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், இயக்குநர் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு, மோனிஷா
பிளஸி, அருவி மதன்
இசை : பரத் சங்கர்
இயக்கம் : மடோன் அஷ்வின்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா (D’ one)
Leave a Reply