ஆர்.பி.பாலா, கெளசல்யா பாலா தயாரிப்பில் ஆர்.பி.பாலா இயக்கத்தில் பரத், வாணி போஜன், ராதாரவி, விவேக் பிரசன்ன, டேனியல் போப், ஸ்வயம் சித்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லவ்’
தொழிலில் பெரிதான வெற்றியைபெற முடியாமல் இருக்கிறார் நாயகன் பரத். இந்த சூழலில்
பரத் – வாணி போஜன் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப்போக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். பரத்தை திருமணம் செய்ய வேண்டாம் என வாணி போஜன் தந்தை ராதாரவி. எச்சரிக்கிறார்
பரத் மீதான நம்பிக்கையில் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் வாணி போஜன் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும்போது பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்போது, ஏற்படும் சண்டையில் வாணிபோஜனை பரத் வேகமாக தள்ளிவிட வாணிபோஜன் இறந்துவிடுகிறார். செய்வதறியாது திகைத்து நிற்கிறார் பரத். இறுதியில் பரத் பிரச்சனையில் இருந்தது மீட்டாரா? இல்லையா? என்பதே லவ்’ படத்தின் மீதிக்கதை.
நடிகர் பரத்தின் 50வது திரை படம் லவ் பரத், வாணி போஜன் ஒரு நிஜ கணவன் மனைவி போல் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். நடிப்பில் இருவரும் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறார்கள். பரத் மனைவியாக வரும் வாணி போஜன், காட்சிகள் குறைவு என்றாலும் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்
பரத்தின் நண்பர்களாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா மற்றும் டேனியல் போப் இருவரும் வழக்கமான வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வாணிபோஜன் அப்பாவாக வரும் ராதாரவி க்கு ஒரு சில காட்சிகள் என்றாலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார். ஸ்வயம் சித்தா ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.
ரோனி ரெபலின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலாமா இருக்கிறது.
மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் ரஜிஷா விஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கி இருக்கும் ‘லவ்’ படம் கணவன், மனைவி உறவுகளிடையே நடக்கும் சண்டை விபரீதமாக மாறுகிறது என்பதை சொல்லியிருக்கிறார். ஒரே வீட்டுக்குள்தான் பெரும்பாலான காட்சிகள் நடப்பதால் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சோர்வை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ‘‘லவ்’ குழப்பம்
மதிப்பீடு : 2 / 5
நடிகர்கள் : பரத், வாணி போஜன், ராதாரவி, விவேக் பிரசன்ன, டேனியல் போப், ஸ்வயம் சித்தா
இசை : ரோனி ஃரேபெல்
இயக்கம் : ஆர்.பி.பாலா
மக்கள் தொடர்பு : சதிஷ் – சிவா (AIM)
Leave a Reply