கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஹமரேஷ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாய் ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா, பிரார்த்தனா சந்தீப், அமீத் பார்கவ் மற்றும் பலர். நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ரங்கோலி’
சலவைத் தொழிலாளியான ஆடுகளம் முருகதாஸ் மனைவி சாய் ஸ்ரீ பிரபாகரன் மகள் அக்சயா, மகன் ஹமரேஷ் ஆகியோருடன் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார். மாநகராட்சி பள்ளியில் படிக்கும் நாயகன் ஹமரேஷ் அங்கு நண்பர்களுடன் சண்டை போட்டதால்.அந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது.
இந்த பிரச்சனையால் ஆடுகளம் முருகதாஸ் தன் மகன் ஹம்ரேஷ்யை சி பி எஸ் இ பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். தனியார் பள்ளியில் அதிக பீஸ் காரணமாக மனைவி மற்றும் மக்ள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. புதிதாக சேர்ந்த பள்ளியிலும் மாணவர்கள் சிலர் ஹம்ரேஷ்விடம் வம்பு செய்ய அவர்களுடன் ஹம்ரேஷ் சண்டைக்கு செல்கிறான்.
அதே வகுப்பில் படிக்கும் நாயகி பிரார்த்தனா யாருடன் பேசி பழகுகிறார் என்பதில் ஹம்ரேஷ்க்கும் சக மாணவர்களுக்கும் போட்டி நடக்கிறது. ஒரு கட்டத்தில் பிரார்த்தனாவை ஹம்ரேஷ் காதலிப்பதாக கழிவறை சுவற்றில் எழுதி இருப்பது புகார் ஆகி ஹம்ரேஷ்ஷை பள்ளியை விட்டு அனுப்ப பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு செய்கிறார் இறுதியில் நாயகன் ஹம்ரேஷ் என் மீது தவறு இல்லை என்பதை நிரூபித்தாரா ? இல்லையா? அதே பள்ளியில் படிப்பை தொடர்ந்தாரா? இல்லையா? என்பதே ’ரங்கோலி’ படத்தின் மீதிக்கதை..
சத்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹம்ரேஷ் துடிப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து மனதில் இடம்.பிடிக்கிறார். இவரை பார்க்கும் போது ஜி வி பிரகாஷை பார்ப்பது போல் இருக்கிறது .அறிமுக படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அமைதியாக வந்து அனைவரின் மனதில் இடம் பிடிக்கிறார். தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை இவர் நிச்சயம் பிடிப்பார் பார்வதியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பிரார்த்தனா கண்களாலே பேசுகிறார்.
அப்பாவாக ஆடுகளம் முருகதாஸ் நடிப்பு சிறப்பு. அவரது மனைவியாக வரும் சாய் ஸ்ரீ யும் நடிப்பு , உடல் மொழிகள், குரல் என்று பிரமாதப் படுத்துகிறார் . மகளாக வரும் அக்ஷயா இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார் .
இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணித்திருக்கிறது. பின்னணி இசை பலம் சேர்க்கிறது. மருதநாயகத்தின் ஒளிப்பதிவு படத்தின் கதை ஓட்டத்தட்டிற்கு துணை நிற்கிறது.
பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் காட்சி பலரது பள்ளி வாழ்க்கையை ஞாபகபடுத்துவதோடு பெரும் எதிர்பார்ப்பையும் நம்மிடையே ஏற்படுத்தியுள்ளர் இயக்குனர் வாலி மோகன்தாஸ்.
மொத்தத்தில் ’ரங்கோலி’ புதுமுகங்களாக சேர்ந்து செய்திருக்கும் புதிய முயற்சி.
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் ஹம்ரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அமித் பார்கவ்
இசை : சுந்தரமூர்த்தி கே.எஸ்.
இயக்கம் : வாலி மோகன்தாஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM),
Leave a Reply