மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் தயாரிப்பில் சிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன், லக்ஷ்மி, ரோஹினி, ஜெயராம், சச்சின் கெட்டேகர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’குஷி
வேலை விஷயமாக காஷ்மீருக்கு வரும் விஜய் தேவரகொண்டா முஸ்லீம் பெண்ணான சமந்தாவை பார்த்ததுமே காதல் கொள்கிறார். பின் இவர் தன்னுடைய காதலுக்காக என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சமந்தா அவருடைய காதலை ஏற்கிறார். இதனையடுத்து சமந்தா பிராமின் பெண் என தெரிய வருகிறது.
இரு வீட்டாரும் பேசி திருமணத்தை நடத்த திட்டமிட, சமந்தாவின் தந்தை முரளி சர்மா இவங்க ஜாதகமே சரியில்லை என்றும் அதற்கு பரிகார பூஜை செய்தால் மட்டுமே இவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என
கூறுகிறார். அதற்கு விஜய் தந்தை சச்சின் கேடகெர் மறுப்பு தெரிவிக்க திருமணம் நிற்கிறது. இதனால் பெற்றோர்களை எதிர்த்து விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் விஜய் தேவரகொண்டா – சமந்தா தம்பதி வாழ்க்கையில் குழந்தை பிரச்சனை ஏற்படுகிறது. நாளடைவில் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு பெரிதாகி இருவரும் பிரிந்து விடும் நிலை ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’குஷி’ படத்தின் மீதிக்கதை.
விஜய் தேவராகொண்டா – சமந்தா இடையிலான காதல் காட்சிகள் ஒரு கவிதை வாசித்த உணர்வை தருகிறது. காதலியாக பெண்ணை ரசிப்பவர், மனைவியான உடன் அவருடைய செயலை வெறுப்பது, அதே மனைவி பிரிந்த உடன் அவர் இல்லாமல் தவிப்பது என்று அனைத்திலும் அசத்தி இருக்கிறார் விஜய் தேவராகொண்டா
சமந்தா விஜய் தேவரகொண்டாவை பார்க்கும் விதமும், பிறகு காதலில் விழுந்தவுடன் அவர் வெளிப்படுத்தும் காதலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது சமந்தா காதல், தாய்மை என உணர்வுகளின் கலவையாக இருக்கிறார். ரோகினி, ஜெயராம், முரளி சர்மா, சச்சின் கேடகெர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர் அவர் வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வாஹப்பின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை மெய் மறக்க செய்கிறது. ஒளிப்பதிவாளர் முரளி.ஜி காஷ்மீரின் மலை முகடுகளும், பனிப்பொலிவும் நம்மிடையே பேசுவது போல் இருக்கிறது.
ஒரு சாதாரணமான காதல் கதையை அனைவரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவ நிர்வானா படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள், சண்டைகள் என சோகமாக கதை நகர்கிறது..
மொத்தத்தில் ’குஷி’ காதலர்களுக்கு பிடிக்கும்
மதிப்பீடு 3 / 5
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன், லக்ஷ்மி, ரோஹினி, ஜெயராம், சச்சின் கெட்டேகர்
இசை : ஹேஷம் அப்துல்
இயக்கம் : சிவ நிர்வானா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply