மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால். எஸ். ஜே.சூர்யா, ரிது வர்மா, அபிநயா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஓய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மார்க் ஆண்டனி’

1975 வருடத்தில்  விஞ்ஞானியான  செல்வராகவன் டைம் ட்ராவலர் டெலிபோன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இந்த போன் மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும். அந்த டைம் ட்ராவலர் டெலிபோன் கண்டுபிடித்த கொஞ்ச நேரத்தில் கேங்க்ஸ்டர் மோதலில் இறந்துவிடுகிறார் செல்வராகவன்.

20 வருடங்களுக்கு பிறகு இந்த டைம் டிராவல் போன் கார் மெக்கானிக்காக இருக்கும் விஷால் (மார்க்) கையில் கிடைக்கிறது. தன்னுடைய அப்பா விஷால் (ஆண்டனி) தான் அம்மாவை கொன்றான் என்றும், அவன் மிகவும் மோசமானவன் என்றும் எஸ்.ஜே.சூர்யாவை (ஜாக்கி பாண்டியன்) அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் மகன் விஷால்

இந்த நிலையில் அவரது கையில் இருக்கும் டைம் டிராவல் செய்யும் போன்  வைத்து தனது அம்மாவை காப்பாற்றி விடலாம் என்று விஷால் முடிவு செய்கிறார். ஆனால் இந்த பயணத்தில் அவர் தனது தந்தை எந்த குற்றமும் செய்யாதவர் என்பதை தெரிந்து கொண்டதோடு அவரை கொலை செய்தது தான் தற்போது தந்தையாக நினைத்துக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா தான் என்பதை அறிந்து கொள்கிறார்.

இதனால் தன் தந்தையை காப்பாற்றி நிகழ் காலத்திற்கு கொண்டு வர விஷால் முயற்சி செய்கிறார். இறுதியில் மகன் விஷால் (மார்க்( தனது தந்தையான ஆண்டனியை நிகழ்காலத்ததிற்கு கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே   ’மார்க் ஆண்டனி’  படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஷால் அப்பா – மகன் என் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  விஷால் நடிப்பு, ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது தோற்றமும், நடிப்பும் ரசிக்க வைக்கிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரை சுற்றி தான் முழுக்கதையும் நகர்கிறது.

வில்லனாக நடித்திருக்கும்  எஸ்.ஜே.சூர்யா நத்தை – மகன் என இரண்டு கதாபாத்திரத்தையும் நடிப்பில் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.   டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என பேர் போட்டு இருந்தார்கள். அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக சொல்லி இருக்கிறார்  

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் டி.ராஜேந்தர் பாடிய அதிருதா பாடல் ஆட்டம் போட வைக்கிறது . பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது.நந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்க்கிறது. டைம் டிராவலை மையமாக வைத்து படம் இயக்குவது என்பது கடினமான காரியமாக இருந்தாலும் அதனை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெளிவாக செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ’மார்க் ஆண்டனி’  நம்ப முடியாத கதை.

மதிப்பீடு : 3/5

நடிகர்கள் : விஷால். எஸ். ஜே.சூர்யா, ரிது வர்மா, அபிநயா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஓய்.ஜி.மகேந்திரன்

இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்

இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹமத்

Leave a Reply

Your email address will not be published.