தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ்’ சண்முகம் ராமசாமி தயாரிப்பில் ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கத்தில் யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு,  மனோகரன், தயாரிப்பாளர் சண்முகம்  ராமசாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஐமா’  

ஐமா என்றால் கிரேக்க மொழியில் ரத்தம் என்றொரு பொருள் உண்டாம். ஐமா என்பதற்கு இறைவனின் சக்தி என்றும் பொருள் சொல்லப்படுகிறது.

பெற்றோர்களை இழந்த நாயகி எல்வின் ஜூலியட், அண்னனுடன்  வசித்து  வருகிறார். ஒரு விபத்தில் இவரது அண்ணன்  உயிர் இழக்கிறார்.தனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரே உறவான தனது அண்ணன் இறப்பால் மனம் உடைந்து போகும் நாயகி எல்வின் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.

மறுபுறம் நாயகன் யூனஸ் உடல் நிலை பாதிப்பால் உயிருக்கு போராடும் தனது தாயை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார்   இந்நிலையில்  இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.  இறுதியில் நாயகன் – நாயகி இருவரும் உயிர் பிழைத்தார்களா? இல்லையா? என்பதே ’ஐமா’  படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக வரும்  யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக  வருகிறார்.இவரை பார்ப்பதற்கு தளபதி விஜய் போலவே இருப்பது மட்டும் அல்ல அவருடைய ஒவ்வொரு அசைவும், வசன உச்சரிப்பும் அப்படியே விஜயின் நகல்  போலவே இருக்கிறது.

கதாநாயகி  நடித்திருக்கும் எவ்லின் ஜூலியட் தப்பிக்கும் காட்சிகளில் நல்ல முக பாவங்களைக் காட்டியுள்ளார். டைபட்டுக் கிடக்கிற இடத்திலிருந்து தப்பிக்கும் காட்சிகளில் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். உதட்டோடு உதடு வைத்து நாயகனுக்கு முத்தம் கொடுத்து அதிர வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறையில்லாத நடிப்பைக் கொடுத்து வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வயதான தோற்றத்தில் இவரை பார்க்கும் போது  மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை  பார்ப்பதை போல இருக்கிறது. அலட்டல் இல்லாமல் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் .

கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் 10  சிறு பாடல்கள் இருக்கின்றன  இவை அனைத்தும் கதைக்கு ஏற்ப உள்ளது.  பின்னணி இசை புதியதாகவும் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குனர் ராகுல் ஆர்.கிருஷ்ணா  ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருக்கிறார் திரைக்கதையில் இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால்  படம் இன்னும் விறுவிறுப்ப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில்  ‘டீமன்‘  சஸ்பென்ஸ். திரில்லர் அனுபவம்

மதிப்பீடு : 2.5 / 5

நடிகர்கள் : : யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு,  மனோகரன், தயாரிப்பாளர் சண்முகம்  ராமசாமி  

இசை: கே.ஆர்.ராகுல்

இயக்கம்: ராகுல் ஆர்.கிருஷ்ணா

மக்கள்  தொடர்பு : சக்தி சரவணன்

Leave a Reply

Your email address will not be published.