டிஜிட்டல் சினிமா அகாடமி சார்பில் டாக்டர். வீ.ஜெயப்பிரகாஷ் தயாரிப்பில், விஜய் பிரகாஷ் இயக்கத்தில் கவுரி கிஷன் , வெற்றி மித்ரன் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர்,பிரணவ் அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ், சாமி,ஜெயந்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’உலகம்மை’
1970: நெல்லை மாவட்டம். உள்ள கிராமத்தில் கதையின் நாயகி கவுரி கிஷன் ஊர் பெரிய மனிதர் மாரிமுத்து விவசாய நிலத்தில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் மாரிமுத்து தன் மகளுக்கு தெரியாமல் பெண் பார்க்க வேண்டும் என்பதற்காக, இவரின் மகளையும், கவுரியையும் கோவிலுக்கு சென்றுவர சொல்கிறார்.
மாப்பிள்ளை, கவுரியை மணப்பெண் என நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த மாப்பிள்ளை மாரிமுத்துவின் மகளை வேண்டாம் என்கிறார். மகளின் திருமணம் நின்றதற்கு கவுரிதான் காரணம், என்று நினைக்கும் மாரிமுத்து, கவுரியை பழிவாங்கும் நோக்கத்தில் அவருக்கு எதிராக ஊர் மக்களை திருப்பி விடுவவதோடு, அவருக்கு மறைமுகமாக பல தொல்லைகள் கொடுக்கிறார்.
இந்நிலையில் கவுரியின் தந்தை திடீர் என இறந்து விட அனாதையாக நிற்கும் நாயகி கவுரி இறுதியில் எடுத்த முடிவு என்ன? என்பதே ’உலகம்மை’ படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் கெளரி கிஷன், உலகம்மை என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் . என்று தான் சொல்ல வேண்டும். நெருக்கடியில் இருக்கும் போதும், தன் தந்தை பிணத்தை சுமந்து செல்லும் காட்சியிலும் கண்கலங்க வைக்கிறார்.
ஊர் பெரிய மனிதராக வரும் மறைத்த மாரிமுத்து வில்லத்த்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஜி.எம்.சுந்தர், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய் பிரகாஷ், வெற்றி மித்ரன், நாயகிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கருப்பு சட்டை வாலிபர் வேடத்தில் நடித்திருக்கும் பிரணவ் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை பாடல்கள் இனிமையாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கே.வி.மணி 1970-ம் காலகட்டத்தை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். கிராமத்து அழகை அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சி.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு, தீண்டாமை கதையை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் வீரப்பன்.சர்ச்சைக்குரிய கதை சிறப்பாக கையாண்டு இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’உலகம்மை’ புதுமை பெண்
மதிப்பீடு 2.5/5
நடிகர்கள் : வுரி கிஷன் , வெற்றி மித்ரன் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர்,பிரணவ் அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ்
இசை : இளையராஜா
இயக்கம் : ஜெயபிரகாஷ் வீரப்பன்.
மக்கள் தொடர்பு : டயமண்ட் பாபு
Leave a Reply