எடாகி என்டர்டைன்மெண்ட் , சார்பில் சித்தார்த் தயாரிப்பில் எஸ்.யு.அருண்குமார், இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஶ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம், பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சித்தா
பழனியில் அரசு வேலை பார்க்கும் நாயகன் சித்தார்த் அண்ணன் மறைவிற்கு பிறகு அப்பா இல்லையே என்ற ஏக்கம் ஏற்படாத வகையில்அன்னான் மகள் சஹஷ்ரா ஶ்ரீயை பாசமாக வளர்க்கிறார். குழந்தையும் சித்தா, சித்தா என்று பாசமாக அழைத்து எப்போதும் சித்தார்த் கூடவே ஒட்டிக்கொள்கிறது.
சித்தார்த் வேலை பார்க்கும் இடத்தில் பல வருடங்களுக்கு பிறகு தன் காதலி நிமிஷா சஜயனை எதார்த்தமாக பார்க்கிறார். மீண்டும் காதல் வசப்படுகிறார். பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர். சித்தார்த் நண்பனின் அக்கா மகளும் சித்தார்த் அன்னான் மகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர்.
அதே ஊரில் ஐய்யனார் கோவில் அருகே, தொடர்ந்து குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது காவல்துறை குற்றவாளிகளை தீவிரமாக தேடித் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சித்தார்த் நண்பனின் அக்கா மகளுக்கு காமூகன் ஒருவனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்படுகிறது. ஆனால் இந்த பழி சித்தார்த் மீது விழுகிறது. இதே சமயம் சித்தார்த் அன்னான் மகள் திடீர் என காணாமல் போகிறாள். இறுதியில் சித்தார்த் மீது ஏற்பட்ட பழி நீங்கியதா? இல்லையா? காணாமல் போன சித்தார்த் அன்னான் மகள் கிடைத்தாரா இல்லையா? என்பதே ’சித்தா படத்தின் மீதிக்கதை..
நாயகன் சித்தார்த் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சித்தார்த்.தான் தவறாக பழியை சுமக்கும் போது தவிப்பதும், அண்ணன் மகள் பாதிக்கப்படும் போது ஒரு அன்பான சித்தப்பாவாகவும் முழுப்படத்தையும் தன் தோல் மீது சுமந்து நிற்கிறார். இதுவரை கமர்சியல் படங்களை கொடுத்து வந்த சித்தார்த் சமூக அக்கறை கொண்ட கதைகளத்தில் நடித்திருப்பது பாராட்டக் கூடிய விஷயம்.
நாயகியாக நிநடித்திருக்கும் நிமிஷா சஜயன் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.அண்ணியாக அஞ்சலி நாயர் இயல்பான நடித்திருக்கிறார். சிறுமிகள் சஹஷ்ரா ஶ்ரீ மற்றும் எஸ்.ஆபியா தஷ்னீம். இரு சிறுமிகளின் இயல்பான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. பழனியின் அழகையும் அவலங்களையும் அழகாக படமாக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம்
பெண் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்.சித்தப்பா – மகள் இடையிலான உறவை சிறப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் சமுக அக்கறையோடு படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’சித்தா சமூக பார்வை
பதிப்பீடு :3.5 / 5
நடிகர்கள் : சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஶ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம், பாலாஜி
இசை : திபு நைனன் தாமஸ், விஷால் சந்திரசேகர்,
இயக்கம் : எஸ்.யு.அருண்குமார்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா ,- ரேகா, நாசர் (D’one)
Leave a Reply