எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர். தயாரிப்பில் எல்.ஜி ரவிசந்தர் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்.புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, தீபா, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வா வரலாம் வா’
சிறையிலிருந்து வெளியில் வரும் பாலாஜி முருகதாஸ் , ரெடின் கிங்ஸ்லி இருவரும் உழைத்து உழைத்து வாழ நினைத்து வேலை தேடுகின்றனர். ஜெயிலுக்கு சென்றவர்கள் என்பதால் யாரும் வேலை தர மறுக்கிறார்கள். இந்நிலையில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மைம் கோபியிடம் வேலைக்கு சேருகிறார்கள். அதன்படி, மைம் கோபி பேச்சை கேட்டு வால்வோ பேருந்து ஒன்றை கடத்த திட்டமிடுகிறார்கள்.
அந்த பேருந்தில் 40 குழந்தைகளும் மலேசியாவில் இருந்து வந்த சகோதரிகள் மஹானா மற்றும் காயத்ரி ரெமா .இருக்க, அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் வகுக்கின்றனர். அதன் பின் தான் குழந்தைகள் அனைவரும் அனாதைகள் என தெரிய வர பணம் பறிக்கும் திட்டத்தை கைவிட்டு மஹானாவை பாலாஜியும், காயத்ரியை ரெடின் கிங்ஸ்லியும் காதலிக்க தொடங்குகின்றனர்.
மறுபக்கம் மஹானா மற்றும் காயத்ரியை கடத்தி பணம் பறிக்க திட்டம் போடுகிறார். மைம் கோபி இறுதியில் பாலாஜி மற்றும் கிங்ஸ்லி காதல் வெற்றி பெற்றதா ? இல்லையா ?- மைம் கோபியின் திட்டம் என்ன ஆனது என்பதே ‘வா வரலாம் வா’ – படத்தின் மீதிக்கதை.
நாயகன் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாசுக்கு இது முதல் படம் போல இல்லாமல் எதார்த்த நாயகனாக வலம் வருகிறார். காதல்,நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மஹானா, கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் தாராளம் காட்டி இளைஞர்களை ஈர்க்கிறார். காயத்ரி ரெமா, சரவண சுப்பையா, கிரேன் மனோகர், வையாபுரி, மைம்கோபி ஆகியோர் படம் வேகமாக நகர துணை நிற்கிறார்கள்
ரெடின் கிங்ஸ்லி நாயகனுடன் படம் முழுவதும் வலம் வரும் கதாபாத்திரத்தில் ரசிகர்களை படம் முழுவதும் சிரிக்க வைத்திருக்கிறார்.
தேவாவின் இசையில் அனைத்துவகைப் பாடல்களும் அருமை தேவாவின் குரலில் ஒலிக்கும் ‘வா வரலாம் வா’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
எல்.ஜி.ரவிசந்தர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்உருவாக்கி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் பதோடு, தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் உடன் இணைந்து இயக்கியுள்ளார். ஏமாற்றி வாழ்வதை விட உழைத்தால் வெற்றி நிச்சயம் என்ற கருத்தை மையாமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் .
மொத்தத்தில் ‘வா வரலாம் வா’ கலகலப்பு
மதிப்பீடு 3 / 5
நடிகர்கள் : பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்.புலி, சரவண சுப்பையா, தீபா,
இசை : தேவா
இயக்கம் : எல்.ஜி ரவிசந்தர்
மக்கள் தொடர்பு : வெங்கட்
Leave a Reply