ஜி ஸ்குவாட் சார்பில் லோகேஷ் கனகராஜ் வழங்க, ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் அஹமத் இயக்கத்தில் விஜயகுமார் ,, மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஃபைட் கிளப்’
வடசென்னையின் வசிக்கும் கார்த்திகேயன் சந்தானம் தன் பகுதி மாணவர்களை விளையாட்டு வீரர்களாக ஆக்க ஆசைப்படுகிறார். அதே பகுதியில் சங்கர்தாஸோடு சேர்ந்து கஞ்சா விற்று வருகிறார் கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பியான அவினாஷ். நாயகன் விஜயகுமாரை கால்ப்பந்தாட்ட வீரனாக ஆக்க ஆசைப்படுகிறார். கார்த்திகேயன் சந்தானம்
கஞ்சா விற்பனைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்திகேயன் சந்தானத்தை அழிக்க நினைக்கிறார் சங்கர் தாஸ்.அவினாஷோடு சேர்ந்து சங்கர்தாஸ், கார்த்திகேயன் சந்தானத்தை கொன்று விடுகிறார்கள் . பழி அவினாஷ் மீது மட்டும் விழ, சிறைக்குச் செல்கிறார் அவினாஷ்.
அவினாஷ் சிறைக்கு போக, இதனையடுத்து சங்கர் தாஸ் அரசியல்வாதியாக வளர்ந்து அந்த பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். சங்கர் தாஸால் ஏமாற்றப்பட்ட அவினாஷ், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை பழிவாங்க நினைக்கிறார். அதற்காக நாயகன் விஜயகுமாரை பகடை காயாக பயன்படுத்தி சங்கர் தாஸை அளிக்க நினைக்கிறான். இறுதியில் நாயகன் விஜயகுமார் நினைத்த படி விளையாட்டு வீரராக மாறினாரா? இல்லையா? எனபதே ’ஃபைட் கிளப்’ படத்தின் மீதிக்கதை.
உறியடி படத்தின் மூலம் தனக்கான இடத்தை பிடித்த விஜயகுமார் இந்த படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதையும் செய்ய வில்லை என்றுதான் சொல்ல வேண்டும் காதல், ரொமான்ஸ்,சண்டை ஆகிய அனைத்திலும் ஒரே மாதியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மோனிஷாமோகன் அழகாக இருக்கிறார். படத்தில் இவருக்கு என்ன வேலை என்றுதான் தெரியவில்லை. .குத்துச்சண்டை வீராக நடித்திருக்கும் கார்தேகேயன் சந்தானம் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் சங்கர் தாஸ் அவினாஷ் நடிப்பு படத்திற்கு ஆறுதல்
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. பின்னணி இசை சத்தம் அதிகம்.
போதைப் பொருள் அரசியல் இளைஞர்களை எப்படி சீரழிக்கிறது என்பதை மைய கருவாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் அப்பாஸ் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லாமல் விட்டுவிட்டார். இந்த படத்தை பார்க்கும் போது மாணவர்களை தவரான பாதைக்கு கொண்டு செல்வது போல இருக்கிறது.
மொத்தத்தில் ’ஃபைட் கிளப்’ மாணவர்களை தவறான பாதைக்கு வழிவகுக்கும் படம்.
மதிப்பீட்க்கு : 2 / 5
நடிகர்கள் : விஜயகுமார் , மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ்
இசை : கோவிந்த் வசந்தா
இயக்கம் : அப்பாஸ் அஹமத்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply