கே ஆர் வழங்கும் ஜி ஆர் எம் ஸ்டுடியோ தயாரிப்பில் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆயிரம் பொற்காசுகள்’
தஞ்சாவூரில் உள்ள குருவாடிப்பட்டி கிராமத்தில்,திருமணமாகாத சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பேறியாக வாழ்ந்து வருகிறார். சரவணன் தங்கை மகன் விதார்த் அவருடைய ஊரில் ஒரு பிரச்சனையால் இங்கு வந்து சேர்கிறார்
நாயகன் விதார்த் இதே கிராமத்தில் வசிக்கும் நாயகி அருந்ததியை பார்த்ததும் காதல் கொள்கிறார். கிராமம் முழுவதும் கழிவறை கட்ட சொல்லி அரசாங்கம் சொல்ல, அதற்காக அரசு தரும் நிதி உதவியை பெற வேண்டி நாயகன் விதார்த்தும், சரவணனும் இணைந்து கழிப்பறை கட்டுவதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டுகிறார்கள் அங்கு இவர்களுக்கு சோழர் காலத்து பொற்காசுகள் கிடைகின்றன.
அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய புதையலை யாருக்கும் தெரியாமல் பிரித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த தகவலை ஊரில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக தெரிந்துக்கொண்டு அவர்களும் புதையலில் பங்கு கேட்கிறார்கள். இறுதியில் நாயகன் வித்தார் மற்றும் சரவணன் இருவருக்கும் அந்த புதையல் கிடைத்ததா? இல்லையா? எனபதே ’ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் மீதிக்கதை.
கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் விதார்த் எதார்த்த நாயகனாக நடித்திருக்கிறார். காதல், காமெடி ஆக்ஷன் என கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகியாக அருந்ததி நாயர் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து இருக்கிறார். எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பேறியாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிருக்கிறார் சரவணன்
குழி தோண்டும் பணி செய்யும் ஜார்ஜ் மரியன், அவருடன் பயணிக்கும் பவன்ராஜ், மீன் வியாபாரியாக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாரதி கண்ணன், ஊராட்சிமன்ற தலைவராக நடித்திருக்கும் கர்ணராஜா, பொற்கொல்லர் வேடத்தில் நடித்திருக்கும் வெற்றிவேல் ராஜா, என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாகவும் நகைச்சுவையாகவும்செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஸின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை , பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. ஒளிப்பதிவாளர் பானு முருகன் கிராமத்து அழகை அழகாக படமாக்கியுள்ளார்.
புதையல் மற்றும் அதை பங்கு போடுவதை மைய கதையாக வைத்து முழு படத்தையும் நகைச்சுவையோடு நகர்த்தி சென்றிருக்கிறார் அறிமுக ரவி முருகையா படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படத்தில் நடித்த அனைத்து பாத்திரங்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். நேரம் போவதே தெரியாத அளவிற்கு படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’ஆயிரம் பொற்காசுகள் காமெடி கலாட்டா
மதிப்பேடு 3.5 / 5
நடிகர்கள் : விதார்த், சரவணன், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான்,
இசை : ஜோகன்
இயக்கம் : ரவி முருகையா
மக்கள் தொடர்பு : நிகில்முருகன்
Leave a Reply