ராம்தேவ் பிக்சர்ஸ் சார்பில் ராம்தேவ், மதுரை சி.ஏ, ஞானோதயா, டாக்டர் எம் ராஜ கோபாலன், டாக்டர் டி சாந்தி, ராஜகோபாலன் ஆகியோர் தயாரிப்பில் ராம்தேவ் இயக்கத்தில் கே. பாக்யராஜ், சோனியா அகர்வால், ஸ்ரீநாத், ரிஷிகாந்த், பிரணா, சூது கவ்வும் சிவகுமார், ராஜ கோபால், மதுரை ஞானம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மூன்றாம் மனிதன்
ராம்தேவ் – பிராணா) தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சப்.இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்த் பிராணாவுக்கு ஆறுதல் கூறுவது போல் அவரை தன் வலையில் வீழ்த்துகிறார்.
மனைவியின் தவறான போக்கை கண்டிக்கும் ராமதேவ் மேலும் குடிகாரனாகிறார் இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்த் கொல்லப்படுகிறார். இந்த கொலை பற்றி புலன் விசாரணை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர் கே.பாக்யராஜிக்கு பல திடுக்கிடும் தகல்கள் கிடைக்கின்றன. இறுதியில் கே. பாக்யராஜ் இந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? எனபதே ‘மூன்றாம் மனிதன் படத்தின் மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் பிரணா, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள் சோனியா அகர்வாலுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.
பிராணாவின் கணவர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம்தேவ், மதுவுக்கு அடிமையானவர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் படத்தி ல் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
வேணு சங்கர் மற்றும் தேவ்.ஜி ஆகியோரது இசையில், ராம்தேவ் வரிகளில் பாடல்கள் கேட்கும் ரகம்,, பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. மணிவண்ணனின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது.
இன்றைய சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பது போல், ஒரு குடும்பம் மட்டும் அல்ல அந்த குடும்பத்தின் எதிர்காலமே ஒரு பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ராம்தேவ். சொல்ல வந்த கருத்திற்கு கைதட்டல் கொடுக்கலாம்,
மொத்தத்தில் மூன்றாம் மனிதன் தகாத உறவிற்கு ஒரு சாட்டையடி
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : கே.பாக்யராஜ்,சோனியாஅகர்வால், ஸ்ரீநாத், ராம்தேவ், பிரணா, ரிஷிகாந்த்
இசை : வேணுசங்கர்& தேவ் ஜி
இயக்கம் : ராம்தேவ்.
மக்கள் தொடர்பு : வேலு
Leave a Reply