லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிப்பில்  இயக்குநர் விஜய் இயக்கத்தில்  அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மிஷன் – சாப்டர் 1’

கோயம்பதூரில் வசித்து வரும் அருண் விஜய் தன் மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்ல நினைக்கிறார். இதனால் தன்னிடம் இருக்கும் நிலங்களை எல்லாம் விற்று பணத்தை  தயார்  செய்கிறார். மறுபுறம் இந்தியாவில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை அழிக்க தீவிரவாதி கும்பல் திட்டம் போடுகிறது.

தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய், எதிர்பாரத ஒரு பிரச்சனையில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைச்சாலை அதிகாரியான எமி ஜாக்சனிடம் தனது நிலையை சொல்லி புரிய வைக்க முயற்சிக்கிறார் ஆனால் எமி ஜாக்சண்  நம்ப மறுக்கிறார்.

இந்நிலையில் அந்த சிறையில் இருந்து மூன்று தீவிரவாதிகள் தப்பிக்க முயற்சி செய்ய அதை அருண் விஜய் தடுக்கிறார். அருண் விஜயின் நடவடிக்கையால் கோபமடையும் தீவிரவாதக் குழுவின் தலைவன், எப்படியாவது சிறைச்சாலையில் இருக்கும் மூன்று கைதிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்று தொடர் முயற்சியில் இறங்க,தான் இருக்கும் வரை அது நடக்காது என்று அருண் விஜய் கூறுகிறார்.

இறுதியில் மூன்று தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்பி சென்றார்களா? இல்லையா? அருண் விஜய்க்கும் தீவிரவாத தலைவனுக்கும் உள்ள முன்பகை என்ன? என்பதே ’மிஷன் – சாப்டர் 1’  படத்தின் மீதிக்கதை..

பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்திருக்கும் அருண் விஜய் அந்த  கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்.மகளின் உயிரை காப்பாற்ற போராடும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்  அளவிற்கு இருக்கிறது. லண்டன் சிறைச்சாலையில் நடக்கும் சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் எமி ஜாக்சன், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அதிரடி சண்டையும் போட்டிருக்கிறார். நர்ஸ் வேடத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பரத் போபண்ணா, சர்தார் வேடத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன், விரஜ், ஜேசன் ஷா, சிறுமி இயல் என படத்தில் நடித்திருக்கும்  அனைவரின் நடிப்பும் இயல்பாக உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகம் ,  பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. சந்தீப் கே.விஜயனின் ஒளிப்பதிவு சிறைச்சாலை  காட்சிகளை சிறப்பாக  படமாக்கியிருக்கிறார்.

தீவிரவாதிக்கும் சிறைச்சாலை அதிகாரிக்கும் இடையே நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்ரறார்கள் என்பதை மைய கருவாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்  இயக்குனர் விஜய்  ஒரு அச்டின் படத்தை  ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

 மொத்தத்தில் ’மிஷன் – சாப்டர் 1’ தரமான படம்

மதிப்பீடு : 3 / 5

நடிகர்கள் : அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா

இசை : ஜி.வி.பிரகாஷ்

இயக்கம் : விஜய்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா & நாசர்

Leave a Reply

Your email address will not be published.