வயல் மூவீஸ் சார்பில் டாக்டர் வீரபாபு, தயாரிப்பு, மற்றும் இயக்கத்தில் டாக்டர் வீரபாபு,, மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் ,மயில்சாமி, சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோர் நடிப்பில் ஜனவரி-25:ஆம் தேதி வெளியாக இருக்கும்  ’முடக்கறுத்தான்’  

கிராமத்தில் மூலிகை வியாபாரம் செய்யும் கதைநாயகன்  டாக்டர் வீரபாபு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வருகிறார். இவருடைய முறைப்பெண்  நாயகி மஹானாவின் அக்காவை பார்ப்பதற்காக சென்னை வருகிறார்கள். இந்நிலையில் மஹானாவின் அக்காவின் குழந்தை  காணாமல் போகிறது.

இதனையடுத்து  காணாமல் போன உறவுக்கார பெண்ணின் குழந்தையை தேடி செல்லும் நாயகன் டாக்டர் வீரபாபுவிற்கு  குழந்தை கடத்தல் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவருகிறது.. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரியான சமுத்திரக்கனிக்கு தகவல் கொடுக்கிறார்.

நாயகன் வீரபாபு  குழந்தைகளை கடத்தும் குற்றவாளிகளின் தலைவனை தேடி ஆந்திரா செல்கிறார். அங்கும்   ஆதரவற்ற குழந்தைகள்  வேறு மாநிலங்களுக்கு  கடத்தப்படுவதை கண்டு அதிர்ச்சி  அடைகிறார். இறுதியில் நாயகன் டாக்டர் வீரபாபு குற்றவாளிகளிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றினாரா? இல்லையா?  என்பதே ’முடக்கறுத்தான்’  படத்தின் மீதிக்கதை.

கதை நாயகனாக நடித்திருக்கும்  சித்த மருத்துவர்  டாக்டர் வீரபாபு கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றியிருக்கிறார் . மருத்துவராக  மாபெரும் சாதனை  படைத்த இவர் தனக்கு  எது வருமோ அதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம். அனைத்து பொறுப்புகளையும்  தன் தோல் மீது சுமந்து நிற்கிறார். நல்ல கதை அதில் இவரது நடிப்பு கொஞ்ச்ம கூட  பொருத்தமாக இல்லை .ஆனால் இவரது உழைப்பு  பாராட்டுக்குரியது.

நாயகியாக நடித்திருக்கும் மஹானா படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன் அதிரடி காட்டி மிரட்டுகிறார்.  போலீஸ் உயர் அதிகாரியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும்  சமுத்திரக்கனி படத்திற்கு  மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் வரும் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி  காமெடி படத்தில்  ரசிக்க முடிகிறது.  சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரது கூட்டணியில் காமெடி ஒரு சில இடங்ககளில் சிரிக்க முடிகிறது.

இசையமைப்பாளர் சிற்பியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை . பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. அருள் செல்வனின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.

வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் எப்படி கடத்தப்படுகிறார் எனப்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார். இயக்குனர்   டாக்டர் வீரபாபு  ஆனால் அதில் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருந்தால் படம் சிறப்பாக இருந்த்திருக்கும்  

மொத்தத்தில் ’முடக்கறுத்தான்’ கதையில் பலமில்லை

மதிப்பீடு : 2 / 5

நடிகர்கள் : டாக்டர் வீரபாபு,, மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் ,மயில்சாமி, சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ்

இசை : சிற்பி

இயக்கம் : டாக்டர் வீரபாபு

மக்கள் தொடர்பு :  ரியாஸ்.கே .அஹ்மத்

Leave a Reply

Your email address will not be published.