வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, லால்,சத்யராஜ், மீனாக்ஷி சௌத்ரி, கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், சுரேஷ் மேனன்,ஜான் விஜய், ரோபோ ஷங்கர், ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சிங்கப்பூர் சலூன்’
கிராமத்தில் சிறுவயதில் ஆர் ஜே பாலாஜியும் கிஷன் தாஸும் நெருங்கிய நண்பர்கள். அதே கிராமத்தில் சலூன் கடைக்காரர் லால் தன் தொழில் மீது வைத்திருக்கும் பக்தியைக் கண்டு வியக்கும் ஆர் ஜே பாலாஜி. பெரியவன் ஆனதும் தானும் ஒரு சலூன் கடை வைப்பேன் என்று உறுதி கொண்டு, கல்லூரி படிப்பை முடிக்கிறார். கல்லூரியில் காதல் தோல்வியடைய, வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்கிறார் ஆர் ஜே பாலாஜி.
மிக பிரமாண்டமான சலூன் கடை ஒன்றை திறக்க திட்டமிடுகிறார் ஆர் ஜே பாலாஜி. சில கோடிகளை தனது மாமனார் சத்யராஜிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார் . அதே சமயத்தில், அங்கு ஏற்கனவே சலூன் கடையில் காலூன்றி நிற்கும் ஜான் விஜய் தன் தொழில் பாதிக்கும் என்பதற்காக அவர் தடையாக வருகிறார். இறுதியில் தடைகளை கடந்து ஆர் ஜே பாலாஜி.தன் தொழிலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே
நகைச்சுவை செய்தால்தான் ஏற்பார்கள் என்கிற வழக்கத்தை உடைக்க முயன்றிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. கல்லூரி மாணவர், சிகை அலங்கார நிபுணர் ஆகியனவற்றிற்காக தோற்றத்திலும் நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார். ஆர் ஜே பாலாஜி மற்றும் கிஷன் தாஸ் இருவரும் நண்பர்கள். இவர்களின் சிறு வயது கேரக்டர்களில் நடித்த சிறுவர்கள் படத்தின் கதாபாத்திரத்தோடு ஒன்றி நம்மை அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தின் முக்கியான கதாபாத்திரம் என்று சொல்லும் அளவுக்கு சத்யராஜின் நடிப்பு அமைந்திருக்கிறது. தனது அனுபவ நடிப்பபை கொடுத்து படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி, ஆர்ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ், கிராமத்தில் சலூன் கடை வைத்திருக்கும் லால், ஆர்ஜே பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் என மற்ற வேடங்களில் நடத்த அனைவரின் நடிப்பு கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறது.
இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
யார் யாருக்கு எது பிடிக்கிறதோ அதை தாரளமாக செய்யலாம், இஷ்ட்டப்பட்டு செய்தால் எந்த துறையாக இருந்தாலும் அதில் பெரிய அளவில் முன்னேறலாம் என்ற கருத்தை சொல்லியிருக்கும் இயக்குநர் கோகுல்,கோகுல்,அதைப் பொழுதுபோக்கு அம்சங்களோடு கலந்து கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ’சிங்கப்பூர் சலூன்’ செய்யும் தொழிலே தெய்வம்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : ஆர் ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி, சத்யராஜ், லால், தலைவாசல் விஜய், ஜான் விஜய்.
இசை: விவேக் – மெர்வின்
இயக்கம்: கோகுல்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்
Leave a Reply