முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அங்கயற்கண்ணன் தயாரிப்பில் குட்டிப்புலி சரவண சக்தியின் இயக்கத்தில் அங்கயற் கண்ணன், பிரானா, குட்டிப்புலி சரவண சக்தி, மயில்சாமி, சாம்ஸ், அபி நக்ஷத்ரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கிளாஸ்மேட்ஸ்’
இராமநாதபுரத்தில் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கும் நாயகன் அங்கயற்கண்ணன் கிடைக்கும் வருமானம் முழுவதையும் குடிப்பதற்கே பயன்படுத்துகிறார். அவரது மாமா சரவண சக்தியும் எந்த வேலைக்கும் செல்லாமல் வேலைக்கு செல்லும் இவரது மனைவி கொடுக்கும் பணத்தை வைத்து கொண்டு எந்நேரமும் குடித்து கொண்டே இருக்கிறார்.
குடிபழக்கத்தால் இருவரும் தொடர்ந்து தனது குடும்பத்திற்கு பல இன்னல்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதே ஊரில் வசிக்கும் மயில்சாமி இவரது மகள் அபி நட்சத்ராவை ஐ.ஏ.எஸ்.ஆக்க ஆசைபடுகிறார். இந்நிலையில் துபாயில் இருந்து வரும் சரவண சக்தி மைத்துனர் ஷாம்ஸ்க்கு பெண் பார்த்து திருமணம் ஏற்பாடு நடக்கிறது. திருமணத்துக்கு முதல் நாள் ஷாம்ஸ் குடித்துவிட்டு ஆட்டம் போட இதனால் ஷாம்ஸ் திருமணம் நின்று விடுகிறது.
ஒரு நாள் சரவண சக்தி , அங்கையற் கண்ணன் மற்றும் மயில்சாமி ஆகிய மூவரும் போதையில் காரில் சென்று கொண்டு இருக்கையில் கார் விபத்துக்குள்ளாகி மரணம் அடைகிறார். மயில்சாமி இறுதியில் மயில்சாமியின் குடுப்பத்தின் நிலைமை என்ன? அங்கையற் கண்ணன் – சரவண சக்தி மனம் திருந்தி குடி பழக்கத்தை கைவிட்டார்களா? இல்லையா? எனபதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அங்கையற்கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார் . மதுபோதையில் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி இருக்கிறது. தனது மனைவி மீது அன்பை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், க்ளைமாக்ஸில் கதறி அழும் இடமாக இருக்கட்டும் அனைத்திலும் அறிமுக நடிகர் போல இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகனின் மாமவாக நடித்திருக்கும் சரவண சக்தியின் அனுபவ நடிப்பு ரசிக்கவும் மற்றும் சிரிக்கவும் முடிகிறது. நாயகியாக நடித்திருக்கும் பிரனா அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்து கதை நகர்விற்கு துணை நிற்கிறார்.
சரவண சக்தியின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, மயில்சாமி என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
பிரித்வி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளது. அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு கதை நகர்விற்கு துணை நிற்கிறது.
குடி பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களை சீரழித்துக் கொள்வதோடு, தங்களை சார்ந்திருப்பவர்களையும் எப்படி சீரழிக்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி படத்தில் காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தையும் சரிசமமாக கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘கிளாஸ்மேட்ஸ் போதை ஏறி போச்சு
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள் : அங்கயற் கண்ணன், பிரானா, குட்டிப்புலி சரவண சக்தி, மயில்சாமி, சாம்ஸ், அபி நக்ஷத்ரா
இசை : பிரித்வி
இயக்கம் : குட்டிப்புலி சரவண சக்தி
மக்கள் தொடர்பு : சதிஷ் – சிவா (AIM)
Leave a Reply