ஒய்ட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா, ஜான் விஜய், பவல், ஜப்பான் குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வித்தைக்காரன்’
மேஜிக் நிபுணரான இருக்கும் நாயகன் சதீஷ், எப்படிப்பட்ட பொருளாக இருந்தாலும் சரி, அதை தனது திறமையாலும் புத்தியாலி தனத்தாலும், திருடும் திறன் படைத்தவர் சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ராவ், ஆனந்தராஜ் என மூன்று கடத்தல்கார்களும் ஒரு காலத்தில் ஒன்றாக தொழில் செய்து வருகிறார்கள்..
காலப்போக்கில் மூவரும் பிரிந்து தனித்தனியாக தொழில் செய்து வருகிறார்கள். நாயகன் சதிஷ் திறமையை கண்ட ஆனந்தராஜ், அவருடன் இணைந்து தங்க கடத்தல் செய்ய அந்த தங்கம் காணாமல் போகிறது. இதனையடுத்து மதுசூதன ராவ் 25 கோடி மதிப்புள்ள வைரத்தை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்.
கொள்ளையடித்த பொருட்களை சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம், என்ற ஒப்பந்தபடி சதீஷ் திருடுகிறார். ஆனால், காரியம் முடிந்த பிறகு அந்த வைரம் காணமால் போகிறது. இறுதியில் காணாமல் போன தங்கம் மற்றும் வைரம் யாரிடம் கிடைத்து கடத்தலுக்கான காரணம் என்ன? என்பதே ’வித்தைக்காரன்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்க்கு ஓபனிங் சாங், பில் மியூசிக் என அனைத்தும் பக்காவாக இருந்தும் காட்சிகளுக்கு பொருத்தமில்லாமலே வந்து செல்கிறார். காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்து முயற்சி செய்திருக்கிறார்.
நாயகி சிம்ரன் குப்தா, பத்திரிகை நிருபராக நடித்து ரசிகர்களை கவர்கிறார். கதையில் முக்கியத்தும் இன்றி இருக்கிறார். ஆனந்தராஜ், சுப்பிரமணி சிவா, மதுசூதன ராவ், ஜான் விஜய், பாவேல் நவகீதன், ஜப்பான் குமார், சாம்ஸ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ், சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இந்தப் படத்தில் டாலர் அழகு என்ற காமெடி கலந்த வில்லனாக நடித்து பல இடங்களில் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.
இசையமைப்பாளர் விபிஆர் இசையில் சுனாமிகா பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு துணை நிற்கிறது. கார்த்திக் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி. முதல் பாதி படத்தை கொள்ளை சம்பவங்கள் மூலம் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றவர் இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகள் விமான நிலையத்திலே நகர்கிறது. ஒரே இடத்தில் கதைக்களம் நகர்ந்தாலும் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சுமார்தான்.
மொத்தத்தில் ’வித்தைக்காரன்’ பெயரில் மட்டுமே
மதிப்பீடு 2.5/ 5
நடிகர்கள் : தீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா, ஜான் விஜய், பவல், ஜப்பான் குமார்
இசை : விபிஆர்
இயக்கம் : வெங்கி
மக்கள் தொடர்பு : சதிஷ் – சிவா (AIM)
Leave a Reply