பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் எனக்குள் ஒருவன் என்ற படத்தினை இயக்கிய பிரசாத் ராமரின் இயக்கத்தில்  செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’

மதுரையை சேர்ந்த நாயகன் செந்தூர் பாண்டியன்  படிப்பை முடித்து எந்த வேலைக்கும் செல்லாமல் பேஸ் புக் மூலம்  பெண்களை வலையில் விழவைப்பதை வேலையாக கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில்  நாயகி ப்ரீத்தி கரணுடன் பேஸ் புக் மூலமாக நட்பு ஏற்படுகிறது.

நாயகி  ப்ரீத்தி கரணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க நினைக்கும் நாயகன் செந்தூர் பாண்டியன்  தனது நண்பனுடன் பைக்கில் மதுரையில் இருந்து மாயவரத்திற்குச் செல்கிறார் இதை  சற்றும் எதிர்பாராத நாயகி வேறு வழியின்றி அவனுடன் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகாருக்கு பைக்கில் செல்கிறார்.

இருவரும் பைக்கில் சுற்றிக் கொண்டிருக்கும் போது பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். தனது பிறந்தநாளுக்கு என்ன கிப்ட் கொண்டு வந்தாய் என் நாயகி கேட்க திடீரென கட்டி பிடித்து முத்தமிடுகிறார்.  செந்தூர் பாண்டியன் .இறுதியில் நாயகனுக்கு எதிராக நாயகி முடிவு எடுத்தாரா? இல்லையா? எனபதே ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் மீதிக்கதை.

கதைநாயகனாக  நடித்திருக்கும்  செந்தூர் பாண்டியன்   ஊர் சுற்றுவதும் ,பெண்களுடன் கடலை போடுவதுமாக படம் முழுவதும் நடித்திருத்திருக்கிறார். தன் சுகத்தை மட்டும் முக்கியம் என்று வாழ்ந்து வரும்  கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி ப்ரீத்தி கரண் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்  துணிச்சலான வண வேடத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். செந்தூர் பாண்டியனின் நண்பனாக வந்த சுரேஷ் மதியழகன், நகைச்சுவை பேச்சால் கவர்கிறார் மற்ற வேடத்தில் நடித்த  அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பிரதீப் குமாரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை  பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு சாலை பயணத்திற்கு நம்மையும் அழைத்து செல்கிறது.

சமூக சில படங்கள் மட்டும்தான்  வருகின்றன அந்த வகையில்  சமூக நலன் மீது அக்கறை கொண்ட இயக்குனர் பிரசாத் ராமர் படத்தை உருவாக்கி இருக்கிறார். பெண்களைத் தவறான நோக்கில் பார்க்கும் இளைஞர்களை எச்சரிக்கும் விதத்தில் இந்தப் படத்தை நாகரிகமாக  சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’  பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு

மதிப்பீடு : 3 / 5

நடிகர்கள் :  செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி

இசை :  பிரதீப்குமார்

இயக்கம் : பிரசாத் ராமர்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர் (D one )

Leave a Reply

Your email address will not be published.