பேப்பர் பேனா சினிமா சார்பில் முத்து பாரதி பிரியன் தயாரிப்பில் எழுத்து,  பாடல்கள் – டைரக்ஷன் மேற்பார்வை மற்றும் மருத்துவ திறனாய்வு : வெடிமுத்து, ரவி செல்வன் இயக்கத்தில் முத்து பாரதி பிரியன், அனீஷ், மனிஷா ஜித், செந்தில் குமாரி, சிசர் மனோகர், வெடிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’ஆராய்ச்சி’

மதுரையில் உள்ள  மருத்துவக் கல்லூரியில் மாணவர்களான நாயகன் அனீஷ் மற்றும் நாயகி மனிஷாஜித் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். எச்.ஐ.வி நோயை குணப்படுத்தக் கூடிய மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அனீஷ் ஈடுபடுகிறார்.

 மூத்து மருத்துவ ஆராச்சியாளர்  (வெடிமுத்து ) நாயகன்  அனீஷ்  கண்டுபிடிப்புக்கு உதவி செய்கிறார். நாயகி மனிஷாஜித் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அக்கறையோடு கவனித்து வருகிறார். மருத்துவ கல்லூரி மூலம்  மாணவர்களுக்கு  கிராமம் ஒன்றில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யயப்படுகிறது.  இதே  கிராமத்தின் தலைவராக இருக்கும்  வெடிமுத்துவின் மகன்  நாயகன் முத்து பாரதி பிரியன் நாயகி மனிஷாஜித்தை பார்த்தும் காதல் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் மனிஷாஜித்தின் இரத்தம் பரிசோதனை செய்யும் போதும அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரிய வருகிறது. . தனக்கு எய்ட்ஸ் கிருமிகளை பரப்பியது தன் காதலன் என்று எண்ணி அவன் மீது கோபத்தை  காட்டுகிறார்.இறுதியில் நாயகி மனிஷாவிற்கு  எய்ட்ஸ்  நோய் வர காரணம் யார்? எனபதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் முத்து பாரதி பிரியன் கிராமத்து  இளைஞராக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், காமெடி  என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார்  எப்போதும் கூளிங்கிளாஸ் போட்டுக்குக் கொண்டு வலம் இவர் கிராமத்து நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடிப்பார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அனீஷ் துடிப்பான  இளைஞராக  நடித்திருக்கிறார். எட்ய்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பதில்  தீவிரம் காட்டுபவர், நடித்திருக்கிறார்  காதல்,செண்டிமெண்ட், என அனைத்தையும் சரிசமமாக கொடுத்திருக்கிறார்.

ஊர் தலைவர் மற்றும் மூத்த மருத்துவ நிபுணர் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் வெடிமுத்து, நடிப்பிலும், தோற்றத்திலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். இவர் அனுபவ நடிகர்  போல இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

விசித்ரன் இசையில் பாடல்கள் அனைத்து  பாடல்களும் திரும்ப திரும்ப  கேட்க வகையில் உள்ளது. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

அடிதடி, வெட்டு குத்து, கொலை ,போதை பொருள் கடத்தல் போன்ற படங்கள் இன்றைய காலத்தில்  வெளியாகி  வரும் நிலையில்  சமூக அக்கறையோடு ஒரு விழிபபுணர்வு படத்தை அழகான காதல் கதையோடு கொடுத்திருக்கிறார்.இந்த படத்தில் ஆபாசம் இலை , முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சிகளும் இடம் பெறவில்லை  

மொத்தத்தில் ’ஆராய்ச்சி’ நிச்சயம் வெற்றி பெறும்

மதிப்பீடு : 2.5 / 5

நடிகர்கள் : முத்து பாரதி பிரியன், அனீஷ், மனிஷா ஜித், செந்தில் குமாரி, சிசர் மனோகர், வெடிமுத்து

இசை : விசித்ரன்

இயக்கம் : ரவி செல்வன்

மக்கள் தொடர்பு : விஜய முரளி, கிளாமர் சத்யா

Leave a Reply

Your email address will not be published.