ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார், மமிதா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கடேஷ், சுப்ரமணியன் சிவா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ரெபல்’
1980களில் மூணாறு பகுதியில் வாழ்ந்து வரும் ஜி வி பிரகாஷ் மற்றும் ஆதித்யா பாஸ்கர் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். இவர்களது பெற்றோர்கள் அங்குள்ள டீ எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
தங்கள் பெற்றோர்களின் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்றால் இவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்நிலையில் ஜி வி பிரகாஷுக்கும் ஆதித்யாவிற்கும் பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனையடுத்து , இருவரும் அந்த கல்லூரியில் படிக்கச் செல்கின்றனர்.
அந்த கல்லூரியில் சக மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோல், அங்கிருக்கும் இரண்டு மாணவர் அமைப்புகள் தமிழ் மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். ,
தமிழக மாணவர்களை கண்டாலே விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் ஜி வி பிரகாஷின் நண்பனான ஆதித்யா, மலையாள மாணவர்களால் அடித்துக் கொல்லப்படுகிறார். இறுதியில் நாயகன் ஜி.வி.பிரகாஷ் மலையாள மாணவர்களுக்கு எதிராக கையில் எடுத்த ஆயுதம் என்ன? என்பதே ’ரெபல்’ படத்தின் மீதிக்கதை.
கதிர் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். காதல்,ஆக்ஷன்,எமோஷனல்,கோபம் என பல பரிமாணங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கல்லூரி மாணவியாக வரும் நாயகி மமிதா, பைஜு அழகு தேவதையாக வலம் வருகிறார். கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.வில்லன்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ், ஷலுரகீம் ஆகியோர் சரியான முறையில் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. அருண்ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 1980 காலகட்டத்தைத் திரையில் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறார்.
1980-ம் காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் முதல் பாதியில் கதை நகர நகர பெரிதான ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதி அதிரடி திருப்பங்களுடன் கதையை கொண்டு சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ’ரெபல்’ உரிமைக்கான போராட்டம்
மதிப்பீடு 3 / 5
நடிகர்கள் : ஜி வி பிரகாஷ்குமார், மமிதா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கடேஷ்,
இசை : ஜி வி பிரகாஷ்குமார்
இயக்கம் : நிகேஷ் ஆர்.எஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply