பாவகி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி, பவ்யா திரிகா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன்,  வின்சென்ட் நகுல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’இடி மின்னல் காதல்

சில நாட்களில் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் நாயகன் சிபி அதற்கு முன்பாக தனது காதலி பவ்யா ட்ரிகாவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று ஒருவர் காருக்கு குறுக்கே விழுகிறார்..இதனால் விபத்தில் அந்த நபர் உயிரிழந்து விடுகிறார். தெரியாமல் நடந்த விபத்து என்றாலும், தன்னால் ஒரு உயிர் பலியானதை எண்ணி வருத்தத்தில் இருக்கிறார் நாயகன் சிபி

இதனையடுத்து உயிரிழந்த நபரின் மகன் ஆதித்யா தனது அப்பா இறந்ததை நினைத்து மனா அழுத்தத்திற்கு  உள்ளாகிறான். அந்த சிறுவன் வீட்டின் அருகில் இருக்கும் பாலியல் தொழிலாளி செய்யும் யாஷ்மின் பொன்னப்பா ஆதரவளிக்க, இறந்து போனவர் வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஆதித்யாவை ரௌடி வின்செண்ட் நகுல் அழைத்து செல்கிறான்.

ஒரு கட்டத்தில் வின்செண்ட் நகுல் ஆட்கள்  அழைத்து செல்லும் சிறுவன் ஆதித்யாவை  காப்பாற்றுகிறான் நாயகன் சிபி ஒரு சந்தர்ப்பத்தில் தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்பதை தெரிந்துக்கொள்கிறார். சிறுவன் ஆதித்யா இறுதியில் நாயகன் சிபி சிறுவன் தந்தையின் தற்கொலைக்கு தான் காரணம் இல்லை என்பதை நிரூபித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக  நடித்திருக்கும் சிபி இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். அச்டின்,காதல்,செண்டிமெண்ட், எமோஷனல் என அனைத்தையும் சரியாக செய்து பாராட்டு பெறுகிறார். கதை தேர்வில் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் இவருக்கான ஒரு தனி இடம் கிடைக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். சிபிக்கு ஆதரவாக இருப்பதுடன் அவர் வெளிநாடு செல்ல எல்லா விதங்களிலும் உதவியாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து தனி கவணம் பெறுகிறார்.

வில்லனாக  நடித்திருக்கும் வின்செண்ட் நகுல் கண்களாலே மிரட்டுகிறார். சிறுவன் ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு கதாபாத்திரத்தில் கச்சிதமாக செய்திருக்கிறான்  பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர்  சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.  ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு  கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.

எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தை மையாமாக வைத்துக்கொண்டு இந்த இரண்டு கதைகளும் ஒரே மையப்புள்ளியில் இணைக்கும் விதத்தில் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். இயக்குநர் பாலாஜி மாதவன் அதை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

மொத்தத்தில்  இடி மின்னல் காதல்’  அன்பே வெல்லும்

மதிப்பீடு  : 3 / 5

நடிகர்கள் : சிபி, பவ்யா திரிகா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன்,  வின்சென்ட் நகுல்

இசை :  சாம்.சி.எஸ்

இயக்கம் : பாலாஜிஹோடர்பு :  மாதவன்

மக்கள் தொடர்பு  : டைமண்ட் பாபு

Leave a Reply

Your email address will not be published.