ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில் ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் ஜெயகிருஷ்ணா, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா சங்கர், தங்கதுரை, சிசஸ் மனோகர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆலகாலம்’   இப்படத்தினை  : ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

விழுப்புரத்திற்கு அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் விதவைத்தாயான ஈஸ்வரி ராவ், தனது மகன் நாயகன் ஜெயகிருஷ்ணாவை பெரிய படிப்பு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். அம்மாவின் லட்சியத்திற்கு ஏற்ப நாயகன் ஜெயகிருஷ்ணாவும் நன்றாக படிப்பதோடு, சென்னையில் உள்ள பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் செய்கிறார்.

கல்லூரி படிக்கும் போது, உடன் படித்த சாந்தினியுடன் காதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். தாய்க்கு தெரிந்தால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்று கூறி, தாயிடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறார் ஜெயகிருஷ்ணா,

திருமணம் செய்ததால் கல்லூரிக்குச் செல்ல முடியாமல், கூலி வேலைக்குச் சென்று தனது மனைவியை நன்கு கவனித்து வருகிறார்  ஜெயகிருஷ்ணா,. வேலை செய்யும் இடத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார் இறுதியில்  ஜெயகிருஷ்ணா, குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? அம்மாவின் ஆசையை  நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே ’ஆலகாலம்’  படத்தின் மீதிக்கதை.

கதை நாயகனாக நடித்திருக்கும் ஜெயகிருஷ்ணா, எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களில் கைதட்டலை பெற்றிருக்கிறார்.கிராமத்து அப்பாவி மாணவராக அனைவரையும் கவரும் வகையில் நடித்திருக்கிறார் மது பழக்கத்திற்கு ஆளானவராக இயல்பாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, கல்லூரி மாணவியாகவும், மனைவியாகவும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரிராவின் சிறப்பான நடிப்பு பல இடங்களில் கண்கலங்க வைப்பதோடு படத்தின் கருத்தை மக்களிடம் ஆழமாகப் பதியவைக்கவும் செய்திருக்கிறது.

தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நற்ற நட்சத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை சேர்க்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கா.சத் தியராஜின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுப்பதுடன் எப்படி உறவுகளையும் சீரழிக்கும் என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லி இருக்கிறார்  இயக்குனர்  ஜெயகிருஷ்ணா  ஆலகாலம். மது அருந்தாதவர்கள் அவர்களது நண்பர்கள் மூலமே மது பழக்கத்தை விளையாட்டாகத் தொடங்குகிறார்கள் என்பதையும், அதன் பிறகு மதுவுக்கு அடிமையாகி உறவுகளையும், உடலையும் சீரழித்துக் கொள்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இருப்பதால்.. மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது

மொத்தத்தில் ’ஆலகாலம்’  அனைவரும் பார்க்க வேண்டியபடம்

மதிப்பீடு : 2.5 / 5

நடிகர்கள் : ஜெயகிருஷ்ணா, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா சங்கர், தங்கதுரை, சிசஸ் மனோகர்

இசை : என்.ஆர்.ரகுநந்தன்

இயக்கம் : ஜெயகிருஷ்ணா

மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்

Leave a Reply

Your email address will not be published.