பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நக்‌ஷத்ரா, சசி லயா, பரணி, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹாசின், தரணி ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ‘ஒயிட் ரோஸ்’

சென்னையில் சைக்கோ கொலையாளியான ஆர்.கே.சுரேஷ் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை  தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்கிறார். இந்த கொலைக்கு குறித்து  காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்நிலையில்  கணவர் மற்றும்  குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் கயல் ஆனந்தி.  ஒரு  நாள்  இரவில் கணவர் மற்றும் குழந்தையுடன் வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் தீவிரவாதி மீது காவல்துறை நடத்திய ,என்கவுண்டரில்  தவறுதலாக கயல் ஆனந்தியின் கணவர்  துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழக்கிறார்.

இந்நிலையில் கணவரை இழந்த நாயகி கயல் ஆனந்தியின் மகளை கந்து வடிக்காரர் கடத்தி விடுகிறார். மகளை மீட்பதற்காக வேறு வழியில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபட முடிவு செய்யும் கயல் ஆனந்திக்கு ஆர்.கே.சுரேஷிடம் இருந்து அழைப்பு வருகிறது. ஆர்.கே.சுரேஷ் வீட்டுக்கு செல்கிறார் கயல் ஆனந்தி

ஒரு கட்டத்தில் ஆர்.கே.சுரேஷை பற்றி தெரிந்து கொண்டு அதிர்ச்சியடையும் கயல் ஆனந்தி அவரிடம் இருந்து தப்பிக்க போலீசாரின் உதவியை கேட்கிறார். இறுதியில் காவல்துறை  ஆர்.கே.சுரேஷிடம்  இருந்து கயல் ஆனந்தியை  உயிருடன்  மீட்டார்களா?  இல்லையா?   ஆர்.கே.சுரேஷ்  சைக்கோ கொலையாளியாக மாற காரணம் என்ன? என்பதே  ‘ஒயிட் ரோஸ் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, அழுத்தமான கதாபத்திரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். கொலையாளியிடம் இருந்து தப்பிக்க எடுக்க முயற்சிகள்  பாராட்டுக்குரியது.  சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வசனம் பேசாமலே கண்களாலே  மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சசி லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சுதர்சனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்,,  பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் வி.இளைஞராஜா இரவு நேரக் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்

சைக்கோ கொலையாளி குறித்த படங்கள் எவ்வளவோ வெளியாகி  இருக்கிறது  அதில் இருந்து  மாறுபட்ட விதத்தில், திரைக்கதை மற்றும் கதையை நகர்த்திய விதத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் இயக்குநர் கே.ராஜசேகர்

மதிப்பீடு : 3 / 5

நடிகர்கள் : கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நக்‌ஷத்ரா, சசி லயா, பரணி, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹாசின், தரணி ரெட்டி

இசை : சுதர்சன்

இயக்கம் : கே.ராஜசேகர்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்

Leave a Reply

Your email address will not be published.