Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், தலைவாசல் விஜய், இளவரசு, கீதா கைலாசம், ரோகினி, அப்துல் லீ ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’டியர்’

நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார் அத்துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பது இவரது ஆசை இந்நிலையில் இவரது அண்னன் காளி வெங்கட் குன்னூரில் வசிக்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷை பெண் பார்க்க அழைத்து செல்கிறார்.

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது இதனாலேயே இவருக்கு திருமண நடைபெறாமலே இருக்கிறது. குறட்டை பிரச்சனை குறித்து ஜி.வி.பிரகாஷ்க்கு தெரியப்படுத்தாமல் திருமணம் செய்து கொள்கிறார். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்

திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் குறட்டையால் பிரச்சனை ஏற்படுகிறது. .மேலும் ஜி.வி.பிரகாஷுக்கு வேலை பறிபோகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் விவாகரத்து தர மறுக்கிறார்.இறுதியில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றாரா? இல்லையா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? எனபதே ’டியர்’ படத்தின் மீதிக்கதை..

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். மனைவியின் குறட்டை பிரச்சனையால் தன் வாழக்கை என்ன மாதிரியான நினைக்கு மாறுகிறது என்பதை இயல்பாக செய்திருக்கிறார். படத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பார்க்கும் போது இவருக்கு அக்கா போல தெரிகிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ வரும் காட்சிகள் ரசிக்க முடிகிறது.

நாயாகியாக நடித்திருக்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர் அதிலும் இது மாதிரி குறட்டை விடும் பெண் கதாபாத்திரத்தில் எந்த நடிகையும் நடித்த முன்வராத கதாபத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதத்தில் உள்ளது.. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உளள்து.. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களோடு நம்மை பயணிக்க வைக்கிறார்.

வித்தியாசமான கதை ஒன்றும் இல்லை குட் நைட் படத்தில் மணிகண்டன் குறட்டை விடுவார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடுகிறார். குறட்டை விடுவதை மைய கருவாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் முதல் பாதியில் இருந்த சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் படத்தின் கதையைத் தாண்டி எங்கேயோ சென்று விட்ட உணர்வு ஏற்படுத்தி சலிப்பை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் ’டியர்’ அரைத்த மாவு

மதிப்பீடு 2 / 5

நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், தலைவாசல் விஜய், இளவரசு,

இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்,

இயக்கம் : ஆனந்த் ரவிச்சந்திரன்

மக்கள் தொடர்பு ; யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.