விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, இளவரசு, சுதா, VTV கணேஷ், தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, ஷா ரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ரோமியோ’ –
மலேசியாவில் வேலை பார்த்து வரும் விஜய் ஆன்டனி திருமணம் செய்து கொண்டால் காதல் திருமணம் தான் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார் பெறோர்களை பார்ப்பதற்காக தென்காசி வருகிறார் விஜய் ஆன்டனி
இந்நிலையில் சென்னையில் பெரிய நடிகையாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் நாயகி மிருணாளினி ரவி, தாத்தா மறைவுக்கு தென்காசிக்கு வருகிறார். இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் ஆண்டனி. இவரை திருமணம் செய்ய விஜய் ஆண்டனி ஆசைப்படுகிறார்.
முதலில் திருமணத்தை மறுக்கும் மிருணாளினி ரவி, ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இதனையடுத்து விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் மிர்ணாளி ரவிக்கு சினிமாவில் நாயகியாக வேண்டும் என்பது தான் லட்சியம் என்பதை தெரிந்து கொள்கிறார் விஜய் ஆண்டனி
இறுதியில் நாயகன் விஜய் ஆன்டனி மிர்ணாளி கதாநாயகியாக ஆக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே ’ரோமியோ’ படத்தின் மீதிக்கதை.
அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி ஒரு தலையாக மனைவியை காதலிக்கும் காதல் நாயகனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், நடனம் , ரொமான்ஸ் மற்றும் எமோஷனல், காமெடி என அனைத்திலும் வித்யாசமான விஜய் ஆண்டனியை பார்க்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் மிருணாளினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெற்றிருக்கிறார். விஜய் ஆண்டனியின் காதலுக்கு உதவுபவராக வரும் யோகி பாபு பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
நாயகியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரா மற்றும் குழுவினர் வரும் காட்சிகள் கூடுதல் கலகலப்பு. விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி ஆகியோரும் படத்துக்குப் கூடுதல் பலமாக இருக்காறார்கள்.
இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது. பருக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவு வெளிநாடு, கிராமம், நகரம் என அனைத்தையும் அழகாக படமாக்கி இருக்கிறார்.
காதல் கதையை அனைவரும் ரசித்து பார்க்கும் விதத்தில் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன், பெண்களின் தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது லட்சியங்கள் திருமணத்துடன் முடிந்து போக கூடாது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் ’ரோமியோ’ பெண்கள் மனதை கொள்ளையடிப்பவன்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, இளவரசு, சுதா, VTV கணேஷ், தலைவாசல்
இசை : பரத் தனசேகர்
இயக்கம் : விநாயக் வைத்தியநாதன்
மக்கள் தொடர்பு : ரேகா
Leave a Reply