மஹா மூவீஸ் தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கத்தில்  வரலக்ஷ்மி சரத்குமார் , மைம் கோபி , கணேஷ் வெங்கட் ராமன், ஷஷாங்க்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’சபரி’

சிறு  வயதிலேயே தன் தாயை பறிகொடுத்த வரலக்‌ஷ்மி சரத்குமார் போதுமான அன்பு கிடைக்காமல் வளர்கிறார். தாய் இறந்த பின் வீட்டுக்கு வரும் சித்தியையும் பிடிக்காமல் போக  ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி கணேஷ் வெங்கட் ராமை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார்.

மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த வரலக்‌ஷ்மியின் வாழ்வில் கணேஷ் தன் முதலாளியின் மகள் உடன் நெருக்கமாக இருப்பது தெரிய வர, அவரை விட்டு பிரிகிறார். தன் மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் கோர்ட்டிலும் தீர்ப்பை பெறுகிறார்.

அதே சமயம், அவரிடம் இருந்து குழந்தையை பிரிக்க அவரது  கணவர் கணேஷ் வெங்கட்ராமன் முயற்சிக்கிறார். இதற்கிடையே, கொலை குற்றவாளியான மைம் கோபி, வரலட்சுமியின் மகள் தன்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாடுவதோடு  குழந்தையை கடத்தி செல்கிறார். இறுதியில் நாயகி வரலக்ஷ்மி  மைம் கோபியிடம்  இருந்து குழந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? குழந்தையை கடத்த சொன்னது யார்? என்பதே  ’சபரி’ படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும்  வரலட்சுமி, படத்தின் முழு கதையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார் எமோஷனல் காட்சிகளிலும் சரி, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் சரி, அசத்தியுள்ளார். குழந்தையை காணாமல் பறிதவிக்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.

வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும்  கணேஷ் வெங்கட்ராம் வில்லத்தனமான  கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்  மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே சமயம் தான் என்ற ஈகோவால், தான் தான் எதிலும் ஜெயிக்கணும் என அவர் செய்யும் அவரின் குரூர குணம் கொண்டவராக நடித்திருக்கிறார்.

வரலக்‌ஷ்மியின் நண்பராக, நடித்திருக்கும் ஷஷாங்க் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். மைம் கோபி வந்து செல்லும் காட்சிகள் மிரட்டலாக உள்ளது.. வரலக்‌ஷ்மியின் மகள் பேபி நிவேக்‌ஷா மிகச் சிறப்பான  நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கோபி சுந்தரின் இசையில் பாடல்கள்  கேட்கும் ரகம்,, பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது.  ராகுல் ஒளிப்பவில் நகர்  மற்றும் மலைப்பிரதேசம் என அனைத்தையும் சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டை  குழந்தை பாசம், குழந்தை மாற்றம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்  இயக்குனர் அனில் கட்ஸ்  தன் குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் போராட்டத்தை அழகாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில்  ’சபரி’   ஒரு தாயின் பாச போராட்டம்

மதிப்பீடு : 2.5 /5

நடிகர்கள் : வரலக்ஷ்மி சரத்குமார் , மைம் கோபி , கணேஷ் வெங்கட் ராமன், ஷஷாங்க்

இசை : கோபி சுந்தர்

இயக்கம் : அனில் கட்ஸ்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்

Leave a Reply

Your email address will not be published.